பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 காலந்தோறும் பெண் உண்பதும், இனம் பெருக்குவதுமாகத்தான் வாழ்ந்தனர். அந்நாட்களில் ஒருவன் ஒரு பெண்ணைக் கருவுறச் செய்யுமுன், அவளைக் கையில் உலோக வளையமிட்டு இரும்பு) இழுத்துச் சென்று, தனிமையில் உறவு கொண்டான். அவ்வாறு அவள் பயன்படுத்தப் பெற்றதற்கு அடையாளமாக, கூரிய கல்லை எடுத்து, அவள் நெற்றியில் குத்திக் குருதி வரச் செய்து, முன்னுச்சியில் அடையாளக் கோடிட்டான். அதுவே இன்றளவும் திருமணத்தின் ஸிந்துாரச் சடங்காக முதன்மை பெற்றிருக்கிறது.” இந்தக் கூற்றுக்கு ஆதாரம் தெளிவாகத் துலங்கவில்லை என்றாலும், இது நம்பற்குரிய சான்றாகத் தோன்றுகிறது. இந்தியப் பழங்குடி இனத்தாரிடையே இருந்து இந்த வழக்கம் வேதகால ஆரியரிடையே பரவிற்றா என்பது ஆய்வுக்குரிய கருத்தாகும். ‘பரிஃபால்ட்” தம் நூலில் பழங்குடி வழக்கங்களைப் பற்றி எழுதுகையில், திருமணச் சடங்குகளில் ஆதிக்குடியினர், மணமகள் குருதி அடையாளம் தரிக்கும் வழக்கைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்வாறு குருதியினால் அடையாளம் இடுவது அவளுடைய கணவனாக வருபவனுக்கு அவள் புனித மானவளாகவும், ஏனைய ஆடவருக்கு அவள் களங்க முடையவளாகவும் கருதப்படுவதற்கான சின்னமாக இருந்ததென்றும் குறிக்கிறார். இந்தச் செய்தி வங்கச் சோதரியின் கூற்றுக்குச் சான்றாகவே இருக்கிறது. பெண்ணுக்கு மருதோன்றி இடும் சடங்கு, சிவப்பு ஆடையினால் அவளை அலங்கரிப்பதும்கூட, இன்றளவும் வடஇந்தியாவில் மிக முக்கியமான வழக்கங்களாக இருக் கின்றன. மணப்பெண்ணின் கைகளிலும், கால்களிலும் செம்பஞ்சுக் குழம்பில் நேர்த்தியாகக் கோலங்களிட்டு