பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் - 81 அலங்களிப்பதும் வடஇந்தியத் திருமணங்களில் முதன்மை பெற்றிருக்கின்றன. வங்கத்தில் இன்றளவும் சுமங்கலிப் பெண்களுக்குரிய சின்னங்களாக உலோக சங்கு வளையல்களும் எலிந்துாரமும் துலங்குகின்றன. பழங்குடி மக்களிடையே, ஒருவனுக்கு ஒருத்தி என்ற பரிணாம வளர்ச்சி தோன்றியிராத நாட்களிலும் சில அநுபவங்களின் மீது நிர்மாணிக்கப்பட்ட நெறிகள், ஏற்கனவே கருவுறச் செய்த நங்கை, புனிதமானவளல்ல என்று காட்டும் அடையாள அவசியத்தை உணர்த்துவதாக இருக்கலா மல்லவா...! ருக்வேத கால ஆரியர் திருமணம் செய்து கொள்வதனால் பெண்ணை உடமைப் பொருளாகப் பாவிக்கக்கூடிய சடங்குகளும், வழக்குகளும் இருந்திருக்கவில்லை. ஆனால் அடிமைகளாகப் பிற இனத்தாரிடம் இருந்து ஆரிய சமுதாயத்தில் வந்து சேர்ந்த வதுக்களை இங்கே நினைவில் கொண்டு வரலாம். ஆரியர் சிந்து-கங்கைச் சமவெளிகளில் ஊன்ற வந்தபோது, போராடுவதற்கும், நிலைப்பதற்கும், எண்ணிக்கையில் குறைவாக இருந்த காரணத்தினால், இனப் பெருக்கத்துக்காக வதுக்களுடன் தொடர்பு கொள்வது உகந்ததாக இருந்தது. இந்த வதுக்களுக்கும், விலை மகள்’ என்ற வழக்கில் பெண்டிரை அடிமைப்படுத்திய நிலைக்கும் மிகுந்த வேற்றுமைகள் உண்டு. ஒர் அரசன், அல்லது செல்வச் சீமான் தனது ஆடம்பர சுகபோக சுய மதிப்பை உலகுக்கு அறிவிக்கும் வகையில் அழகிய பெண்டிரை அந்தப்புர அடிமைகளாக வைத்த நிலை முழு ஆணாதிக்கச் சமுதாயத்தின் பிரதிபலிப்பாகும். கா.பெ. - 6