பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 89 திருவிளக்குப் பூசை வழிபாட்டின் ஒரு பரிமாணம் இது. இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்வதற்காகவே, வண்ண வண்ணப் படங்களை நேர்த்தியாக அச்சிட்டு, உருத்திராட்ச, தாடி சாமியார்கள், காவி மடாதிபதிகள், கோயில் கருவறைகளில் வீற்றிருக்கும் தெய்வங்கள் ஆகியோருடன் மஞ்சட் குங்குமப் பெண்களையும், கன்னியரான செல்வி யாரையும், பூசைகளையும் விளக்கமாக்கி விநியோகிக்கும் பத்திரிகைகளின் செல்வாக்கை அறிந்திருக்கிறேன். இந்தச் சுவாமி ஊர்வலம் எனக்குப் புதிதாகத் தோன்றுகிறது. விளம்பரம் வீடியோ சென்டருக்கா, விளக்குபூசை செய்யும் மங்கலப் பெண்டிருக்கா, அல்லது பூரீலபூரீ ஸ்வாமிகளுக்கா என்ற யோசனை என்னைக் குடையலாயிற்று. வீடியோ நாடாச் சுருள் பிரதிகளை ஒவ்வொரு ஸ்வாஸினியும் மேற்கொண்டும் பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம் என்பதும் மறைந்திருக்கும் ஒர் உண்மையாகும். மஞ்சள் குளித்து, கூந்தலில் பூப்பாரம் ஏற்றிக்கொண்டு, நெற்றியில் குங்குமப் பொட்டுகள் ஒன்றோ, இரண்டோ வைத்துக்கொண்டு, மையார்ந்த கண்களும், சுடர்பொழியும் தோடு, மூக்குத்தி மாட்டல், சங்கிலிகள், காசுமாலைகள், வளையல்கள் என்று பொன்னும் மணியும் சுமந்து, பளபளக்கும் காஞ்சிப் பட்டாடைகளுடன், மருதோன்றிச் சிவப்பு நகங்களில் ஏறியிருக்க கால்களில் வெள்ளிக் கொலுசு, சிவப்பு ஏறிய குதிகால் தெரிய, பொருத்தமான வண்ணச் செருப்புகள் அணிந்து, வண்ணக்களஞ்சியமான ஊர்வலம், காவிச் சுவாமிகளைச் சூழ்ந்து நகருவதைக் கற்பனை செய்து பார்க்கிறேன். இந்தப் புதிய ஸ்வாஸினிகளுக்கு வீடியோவில், தோன்றும் ஆர்வமே, மஞ்சள்குங்குமம், சுவாமி, பூசை என்று பேரார்வத்தைக் கிளப்பிவிட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையில் இந்தப் பூசை ஏற்பாடு செய்தவன் தத்துவம், இவர்களில் பலர் அலுவலகப் பணியாளர்களாகவும் இருப்பதில் நிலை கொண்டு