பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 93 ஒருத்தி இருந்தாலே பெரிது. ஒ! ஒரு பெரிய வீட்டை, மூன்று நான்காகத் தடுத்து, பிறைகள் போன்ற அறைகளில், அண்ணன் தம்பிப் பாகம் செய்ததினால் கிடைத்த பகுதிகளில், வெள்ளைச்சேலைத் தாயும், இதே வெள்ளை வாரிசாக இளம்பெண்கள் பலரும் வாழ்ந்த நிலையை இன்று எண்ணிப் பார்க்கிறேன். இவர்களில் சிலர் நன்றாக வேலை செய்வார்கள். குரோஷா வலை அட்டைப் பூ நூல் வேலை செய்யத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். பின்னலுக்குத் தாழம்பூ மல்லிகைப்பூ தைக்கும் அலங்கார வேலையில் திறமை பெற்றிருப்பார்கள். திருவிளக்கு துளசியம்மன் தோத்திரங்கள், மீனாட்சி கல்யாணம், லலிதாம்பாள் சோபனம் போன்ற பாடல்கள், கல்யாணப் பாடல்களான நலங்கு ஊஞ்சல், லாலி, பத்தியம், ஒடம் என்ற வகைப்பாடல்கள் எல்லாம் பாடக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்தக் குருட்டுப் பிறைகளுக்குள் சென்று, பழுப்பேறிய நோட்டுப் புத்தகங்களில் இருந்து சில பாடல்களை எழுதிக்கொண்டு அவர்கள் பாடுவதைக் கேட்டு வியந்திருக்கிறேன். ஆனால், இத்தனை தெரிந்தும் அவர்கள் எந்தக் கல்யாணங்களிலும் விசேடங்களிலும் முகம் காட்டமாட் பார்கள். அப்பளம் இடுவார்கள். வயதான தாயார் வீடுகளில் கொண்டு கொடுப்பாள். ஒரு வீட்டில், பெரிய தலையான மாமியார், அவளுடைய மங்கலமிழந்த பெண் வயசுக்கு வருமுன் ஏழு வயசிலேயே வெள்ளை வாங்கியவள். ஒரே மகனும் இறந்துவிட மருமகளும் முடங்கி, இரண்டு பிள்ளைகளை வேதம் படிக்க விட்டுவிட்டு ஒரே வீட்டில் வாழ்ந்தாள். நாத்தியின் கொடுமை வசைகள் சகிக்க முடியாதவை. ஜீவனாம்சம் என்று எதுவும் புருஷன் வீட்டில் கொடுக்கவில்லை. தாயை அண்டியே வயிறு வளர்க்க வேண்டும்.