பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 97 செல்லக்கூடாது என்று சொல்லிப் பார்த்தேன். அது எடுபடாதென்பது மட்டுமில்லை, அந்த அமைப்புக்கே ஒவ்வாத ஆசாமியாக ஒதுக்கப்பட்டேன். பெண்களுடன் நிற்க மன மின்றி, வெதும்பி, அந்த நீண்ட பொழுதைக் கழித்தேன். விலங்கினத்திலும் கேடு கெட்ட மனப்பாங்காக இது தோன்றியது. இந்த நிலையில், ஸ்மார்த்த வடகலை, தென்கலைச் சம்பிரதாய மரபு, என்னுள் ஒரு கேலிக்கூத்தாகவும் ஒர் ஆர்வத்தைக் கிளப்பியது. தங்கள் தோழிகளாக உற்றவர்களாக மகிழ்ந்து பழகியவர்கள், இவ்வாறு மனிதப்பண்பு இல்லாத கொடுரமான சொற்களுடன் விலக்கப்படும்போது, அதனால் ஒரு சிறு பாதிப்பும்கூட இல்லாதவர்களாக, மற்றவர் அந்தப் பிராமணரை வணங்கி உள்ளே செல்கிறார்கள் என்றால், பெண்களின் கல்வியும் பல முன்னேற்றங்களும் ஒட்டு மொத்தமாகப் பயனே அளிக்கவில்லை என்றுதான் தோன்றிற்று. ஏன் என்று கேட்கும் அறிவு யாருக்குமே இல்லை. அந்த அறிவு அன்று ஏழு வயதில் உபநயனம் முடக்கப்பட்டு கல்யாண பீடத்தில் இவளைத் தள்ளிய நாளிலேயே மழுங்கடிக்கப்பட்டதாகி விட்டது. இந்நாள் வரை, அந்த அறிவுக் கண் துலங்கி நல்லொளியைக் காட்டவில்லை. சமுதாயக் கட்டுக்கோப்பு, குழந்தைகள் அன்பும் அரவணைப்புமாக வளர்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்கி விரிக்க வேண்டும் என்ற நோக்கில், காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த ஆதிமக்கள், திருமணம், குடும்பம், இல்லாமல் சொத்து, சுகம் என்று நாகரீகமடைந்தவர்கள். பாரத நாட்டுப் பழங்குடியினர், தாய்வழி மக்களாகவே இருந்தனர் என்பதையும் பல சான்றுகளால் ஊகிக்க முடிகிறது. ஆரியர் வருகைக்கு முந்திய வலிந்து வெளி நாகரிக மக்கள், மொஹஞ்சதாரோ அகழ்வுகளின் சான்றுகளை ஒட்டிப் கா.பெ. - 7