பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 காலந்தோறும் பெண் “நில்லுங்கோ, இங்கே தலைமுடி வச்சிண்டவா, ஸ்மார்த்தா, வடகலைக்காரா, புருஷனில்லாதவா வரப்படாது. மத்தவா வரலாம்..” என்றார். எனக்கு இச்சொற்களைக் கேட்டதும் பேயறை கொண்டாற்போல் இருந்து. உண்மையில் இதை ஏற்பாடு செய்த பெருமாட்டிகளில் முக்கியமானவர், அவர் குறிப்பிட்ட ஸ்மார்த்தப் பிரிவினில் வந்தவர். கணவரை இழந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. தலைமுடி வைத்திருந்தார். அவர் கணவர் இருந்த காலத்தில் சுவாமிகளை மாதர் சங்கத்துக்கே அழைத்து, பாத பூசை விமரிசையாகச் செய்து மகிழ்ந்திருக்கிறார். இப்போது இவர் உள்ளே வருவதற்கே தடைக்கோடு கிழிக்கப்படுகிறது. இந்த அவமானம் என்னைத் தவிர அங்கே யாருக்குமே உறைத்ததாகத் தெரியவில்லை. அந்தத் தடைச் சொற்களைவிட, பெண்மணிகள் தலைவணங்கி அதை ஏற்றுக்கொண்டது எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. சங்கத்தின் காப்பாளர் போல் ஊழியம் செய்த பெண்மணியும் கைம்பெண்தான். ஆனால் அவள் பிராம்மண வகுப்பில் உதித்தவளல்ல. எனவே அவள் உள்ளே, வரலாம். வைணவ சம்பிரதாயத்தில் தென்கலை, வடகலை என்ற இரு பிரிவினர் உண்டு. அவர்களில் வடகலை மரபில் வந்து கைம் பெண்ணானவர் மட்டுமே மகா பாபிகள். எனவே அத்தகைய பெண்டிரில் சிலர் உள்ளே வர இயலாது. தென்கலை மரபினரில் ஒரே ஒரு பெண்மணி, கைம்பெண்ணானவள் உள்ளே வந்தாள். வரக்கூடாதவர்கள்! அந்த இடத்தை ஒட்டிய நீர்க்கரைத் தோப்பொன்றில் தங்கிவிட, மற்றவர், காணிக்கைகள் அடங்கிய தட்டுகள் தாம்பாளங்களுடன் சுவாமி களைத் தரிசித்து, கோலாகலமாக அருள் பெறச் சென்றார்கள். பாடல்களைப் பாடினார்கள். தனித்தனியே அறிமுகம் பெற்றார்கள். எனக்கு உள்ளே அடிவைக்க மனச்சாட்சி மறுத்தது. எனது நியாய அநியாய உணர்வை வெளிப்படுத்தி யாருமே உள்ளே