பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

21


தாங்கள் ஏற்படுத்தியுள்ள நீதிபதிகள் செய்யும் விசாரணைக்கு உட்படுவேன். நான் எவ்வளவு குற்றமற்ற _வாழ்க்கையைக் கொண்டிருந்தேன் என்பதையும் நிரூபிப்பேன்’ -எனக் கூறினன். தருமரும் “நன்று, உடனே செல்லுக, தாமதிக்காதே, மறுபடியும் காலனை எவும்படி வைத்துக் கொள்ளாதே. உன் மனைவியை நன்றாய்க் கண்டித்துப் பயமுறுத்தி வா” என ஏவினர்.

உடனே கிளம்பிற்று கடோர சித்தனுடைய ஆவி , நுழைந்தது கண்ணபுரத்தில் தனது வீட்டின் வாயிலின் வழியாய்; புகுந்தது சேமித்து வைத்திருந்த தனது சொந்த உடலில்; புகுந்ததும் எழுந்தனன், ஐயா, கடோர சித்தன். உண்டனன் அங்குத் தயாராய் வைத்திருந்த உணவை உண்டதும் மும்முறை ‘சங்கிலிக் கறுப்பண்ணா, சங்கிலிக் கறுப்பண்ணா, சங்கிலிக் கறுப்பண்ணா’ எனக் கூவினன்; கூவின மறுநிமிஷமே அயர்ந்து நித்திரை போயினன். நித்திரையில் கனவில், நாராயணமூர்த்தியின் திருவருள்பெற்ற சங்கிலிக்கறுப்பன் தன் எதிரில் புன்சிரிப்புடன் தோன்றி நின்று “அன்ப! மாயன் பெருமாள் உன்னை மன்னித்து விட்டனர். காலனை நீயே கூவி “என்னைக் கொண்டுபோ” என்று நீ கூறினாலொழிய காலன் உன்னே அனுகான். இப்பூலோக வாழ்க்கையிற் சுகம் என்று எண்ணப்படும் எல்லாப் போகங்களும் வைபவங்களும் உனக்குக் கிடைக்கும். உன்னுடைய ஜீவாத்மா ஒரு வாசனைத் தூபக்கால் போலும். வாசனைத்துாபங்கள் சற்று நேரம் வாசனை வீசி மறைகின்றன. அவை எரிந்த தூபக் காலோ அங்ஙனம் மறையாது விளங்குகின்றது. அது