பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிநூலின் வரலாறு 其莎莲 •of தைக் கவரும் பல்வேறு பொருள்களில் அவர் கவனம் இழுக்கப்பெறும் என்றும் அறிவர். திறய்ைந்து கற்கும் மனப்பான்மை, ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற அவா, உண்மை காணவேண்டும் என்ற உணர்ச்சி முதலிய பண்புகளும் அவர்களிடம் உண்டாகும். பல தொரட்டுக்களுடனும் சந்தியுடனும் எழுதும் உரை நடைகளை விட்டு தெளிவான தீந்தமிழ் நடையைக் கையாண்டு திராவிட மொழிகளில் உரை நடை வளத் தைப் பெருக்குவதற்குரிய வாய்ப்புக்கள் எல்லாம் உண்டாக வழிகள் தோன்றும். ஐரோப்பிய அறிஞர்கள் இத்துறையில் கவனம் செலுத்தி வருதல் போலவே, ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள புலவர்களும் கவனம் செலுத்தினுல் இதுகாறும் மொழிநூல் அறிஞர்களின் மனத்தைக் குழப்பிவரும் பல பொருள்கள் தெளிவாகும். ஆங்கில அறிவு பெற்ற தமிழ்ப் புலவர்களும் மொழித்திறம் பெற்ற தமிழ்ப் புலவர்களும் இத்துறையில் கவனம் செலுத்த வேண்டும்; அதற்கு முன்னர் திராவிட மொழிகளின் இலக்கணங்களே நன்ருகப் பயின்று, தமிழ் மொழியில் மொழி நூல் சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நூல்களே யும் எழுதவேண்டும். டாக்டர் மு. வரதராசனர் மொழிநூல் ஒன்று வெளி யிட்டு இருப்பது போல பல நூல்களேயும் பலர் வெளி யிடுதல்வேண்டும். அம்மாதிரியான நூல்களை மொழி நூற்கலையை ஆராய்வோர் படித்தால், தமது புலமையைக் கொண்டு இன்னும் பல உயர்ந்த நூல்களே வெளியிட லாம்; வெளியிடமுடியும். ஏற்கெனவே, வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், மாகறல் கார்த்திகேய முதலியார், கா. சுப்பிரமண்ய பிள்ளே, யாழ்ப்பாணம் சுவாமி ஞானப்பிரகாசர் முதலியோர் இத்துறையில் தொண்டாற்றித் தமிழ் மொழியிலேயே நூல்களையும் இயற்றி யுள்ளனர். இன்று இத்துறையில் தமிழறிஞர்