பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

董も8 காலமும் கவிஞர்களும் AASAASAASAAMSMAAASA SAASAASSAAAAA MM AMM AAAA SAAAAA AAAA SS AASAA SAAAA SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS கொண்டு சங்கத்தாரில் தானும் ஒருவகிை விடுதல். முதல் நிலையை அடைந்த ஒருவர் வெளியாருக்குச் சங்கத்தைச் சேர்ந்தவராகக் காணப்பெற்ருலும், சங்கத் தில் அவருக்கு உள்ள பதவி தாழ்ந்ததே. சிலருக்கு இரண்டு படிகளும் ஒரே காலத்தில் அளிக்கப்பெறும். ஆனால், முதற்படியை அடைந்த சில காலத்திற்குப் பிறகுதான் இரண்டாவது படியை அளிப்பது வழக்கம். முதல் நிலையைப் பெறுவோர் சங்கத்தார் எதிரில் சென்ருே ஆண்டில் முதிர்ந்த ஒரு பெளத்த துறவி யிடமோ அதைப்பெற்றுக் கொள்ளலாம். தலையை மழித்துக்கொண்டு துவராடையை அணிந்து கொண்டு முதல் நிலையை அளிக்கும் துறவியிடம் சென்று வணக் கத்துடனும் பக்தியுடனும் மூன்று தடவை, புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்று சொல்லவேண்டும். பிறகு துறவியருக்குரிய தச சீலங்களையும் மேற்கொண்டு ஒழுகுவதாக விரதம் செய்துகொள்ளவேண்டும். இரண் டாவது படியை அடையும்பொழுது சங்கத்தார் முன் சென்று பெரியீர், அடியேனுக்குத் துறவறங் கொடுத் தருள்க. அடியேனேயும் சங்கத்தாருள் ஒருவகை ஏற் றருள்க. அடியேன்மாட்டுக் கருணைகாட்டுக. ’’ என்று இரண்டு மூன்று தடவை சொன்ன பிறகு சங்கத்தார் அவனைப் பெயர் கூறி அழைத்து சில விளுக்களைக் கேட்பர் ; அவற்றிற்குச் சரியான விடை யிறுத்த பிறகு எல்லோரும் அறியும் வண்ணம் குரு சீடர் இயற்பெயர் சொல்லி சங்கத்தில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளப் பெறுவர். அதன்பிறகு பிச்சை எடுத்த உணவைத் தான் உண்ண வேண்டும்; பிறர் விட்டெறிந்த கந்தை களேயே உடுத்தவேண்டும்; காட்டிலுள்ள மரத்தடி யைத்தான் இருப்பிடமாகக் கொள்ள வேண்டும்; கோமூத்திரந்தான் அவருக்குத் தக்க மருந்தாக அமைய