பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலமும் கவிஞர்களும்

19


கணவன்மார்களைத் தழுவிக்கொண்டார்களாம். இவர்கள் இம்மாதிரி தழுவிக்கொண்ட காட்சிகள் இராவணன் கயிலைமலையைத் தூக்கும் பொழுது நடுநடுங்கி சிவபெருமானை உமையம்மை தழுவிக் கொண்டதைப்போல் இருந்தனவாம். இதனைக் கம்ப நாடன்,

“வெயிலியற் குன்றங் கீண்டு
வெடித்தலு நடுக்கம் எய்தி
மயிலியல் தேவி மார்கள்
தழீ இக்கொளப் பொலிந்த வானோர்
அயில் எயிற் றரக்கன் அள்ளத்
திரிந்த நாள் அணங்கு புல்லக்
கயிலையின் இருந்த தேவைத்
தனித் தனிக் கடுத்தல் செய்தார்”

[1]

என்று அழகான கற்பனையால் கூறுகின்றான். அநுமன் விண்ணில் பறந்து சென்ற காட்சி, தன்னைத் தூக்கிய இராவணனைப் பழிவாங்கவேண்டுமென்று கருதி கயிலை நாதர் இல்லாத சமயம் பார்த்துச் சீறி எழும் கயிலை மலையை ஒத்திருந்தது என்பதை,

"அண்ணல்வாள் அரக்கன் தன்னை

அமுக்குவாம் இன்னம் என்னாக்

கண்ணுதல் ஒழியச் செல்லும்

கைலையங் கிரியும் ஒத்தான்" [2]

என்ற அடிகளால் வருணித்துள்ளான். பெரும்பாலும் உவமையணி பயின்றுவரும் பகுதிகள் யாவும் இக் கற்பனைக்குள் அடங்கும்.

தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களும் நளன் உருகொண்ட நான்கு தேவர்களும் வந்திருக்கின்றனர். தமயந்தி அவர்கள் இருந்த கொலுமண்டபத்திற்குச் சென்றதை,


  1. 13 சுந்தர- கடல்தாவு-11, * 14 .25:
  2. 14