பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காலமும் கவிஞர்களும் வாறு காட்டுவது அவ்வப்பொழுது அவர்கள் கொண் டுள்ள மனப்பாங்கையும் மனநிலையையும் பொறுத்தது. ஆங்கிலக் கவிஞரான வொர்ட்ஸ்வொர்த் என்பார் தமது பாடல்களில் தத்துவத்தைக் கலந்து தருகின்ருர் ; கம்ப நாடன் தனது பாடல்களில் பல உலகியல் உண்மைகளே யும் இறைவன் தன்மையையும் குழைத்து வெளியிடு கின்ருன். திருத்தக்க தேவர் பாடல்களில் நிலையாமை உணர்ச்சி பொங்கி வழிகின்றது. ஆராய்ச்சிக்காகக் கற்பனை மூன்றுவகையாக வகுக் கப்பெற்றதேயன்றி. கற்பனை இம்மூன்று பிரிவில்தான் அடங்கும் என்று வலியுறுத்துவதற்காக அன்று; அநுப வத்தில் கவிதைகளில் இம்மூன்றுவிதக் கற்பனைகள் கலந்தும் வரலாம், கலவாமலும் வரலாம். சில சமயம் கற்பனைகளே இனம் வகுக்கவும் இயலாது.