பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயற்கைக் கூத்து

33


 (பரிதியஞ் செல்வன்-சூரியன்; தானை-சேனை; இருள் வளைப்பூண்ட-இருட் படலங்களால் முற்றுகையிடப்பட்டன போன்று; பூம்பொழில்-அழகிய சோலை; கொளுத்திக்காட்ட-பொருத்திக் காட்ட; மழலை வண்டினம்-இளைய வண்டு இனங்கள்; பொதும்பர்-இளமரக்கா (park); அரங்கு-நாடக மேடை) என்பது சாத்தனாரின் சொல்லோவியம்.

சாத்தனாருக்குப் பிறகு வந்த திருத்தக்க தேவர் என்ற சிந்தாமணியின் ஆசிரியர் இந்த இயற்கை நடனத்தை இன்னொருவிதமாகக் காட்டுகின்றார். அவர் இளவேனிற்காலத்தையே நாட்டியம் ஆடும் ஓர் ஆண் மகனாகவே உருவப்படுத்தி விடுகின்றார்.

அவர் காட்டும் காட்சி : இளவேனிற்காலம். ஓர் அழகிய சோலையில் ஏராளமாகப் பூக்கள் பூத்துக் குலுங்கி நிற்கின்றன. வண்டுகள் இளியென்ற பண்ணைப் பாடும் யாழ்போல் ஒலிக்கின்றன. கரிய கண்களையுடைய தும்பிகள் புல்லாங்குழல் போல் ஓசை எழுப்புகின்றன. குயில்கள் கூவுவது மத்தள ஒலிபோல் கேட்கின்றது. காட்டின் வழியாகத் துாது செல்லும் பாணன் பாடும் பாட்டு நடனத்திற்கான பாட்டாக உதவுகின்றது. இந்தச் சூழ்நிலையில் மேற்காட்டிய இசைக் கருவிகளைத் துணையாகக் கொண்டு இளவேனில் என்ற கூத்தன் நடனம் ஆடுகின்றான்.

இதோ கவிஞன் காட்டும் நடனக் காட்சி :

"இளிவாய்ப் பிரசம் யாழாக
இருங்கண் தும்பி குழலாகக்
களிவாய்க் குயில்கள் முழவாகக்
கடிபூம் பொழில்கள் அரங்காகத்

47–4