பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
iv

மேற்கூறிய வகைகளில் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் எழுதி உதவியுள்ள 'காலமும் கவிஞர்களும்’ என்ற முதற் கட்டுரைத் தலைப்பையே மகுடமாகக் கொண்டது இந்நூல்,கவிஞர்களின் வழியாக அமைந்து மிளிரும் நந்தமிழ் நாட்டுக் கவிதைகள், காவியங்கள், இறைவழிபாடுகள், அறிவியல் ஆற்றல்கள், வாணிக முறைகள், நமது மொழியின் வரலாற்று இலக்கணங்கள் ஆகிய கருத்துக்களைத் திறனாய்வு முறையில் தெளிந்து நடையில் பன்னிரு கட்டுரைகளாக அடக்கிக்கொண்டு ஒரு கட்டுரைக் கருவூலமாகத் திகழ்கின்றது. சிறப்பாக, பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் காப்பியப் பெருமைகளும், பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவுத் துறைகளும், திராவிடமொழி நூலின் தெளிந்த வரலாறும், ஆசிரியரின் ஆராய்ச்சித் திறனைப் புலனாக்குகின்றன. 'தமிழுடன் ஆங்கில உறவு’ என்னும் தலைப்புக் கொண்ட கட்டுரை நந்தமிழுக்கு இந்நிலையில் ஆக்கம் காணும் வழிகளை வகுக்கின்றது. அவற்றினத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு சிந்தித்துப் புதிய துறைகளில் தமிழை வளர்க்க முனைதல் வேண்டும். புத்தர் காட்டிய நெறி தமிழ் நெறியாகவே மணிமேகலையிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்டிருக்கின்றது. வளரும் பயிர் நம் நாட்டு வருங்கால மக்களுக்கு வழுவாது வகுக்கவேண்டிய வகையினே வற்புறுத்துகின்றது.

இந்நூலினத் தமிழ் மக்கள் நன்முறையில் வரவேற்பார்களென்பது திண்ணம். கட்டுரைகள் யாவும் பழமையையும் புதுமையையும் இணைத்து வழுவின்றி வருங்காலத்திற்குஏற்ற கருத்துக்களே வழங்குகின்றன. தமிழ் மாணவர்களும்,பொது மக்களும் இவற்றினேப் படித்துத் தமிழ்க் கலையின் பல கோணங்களேக் காணலாம். இந்நூலினைக் கல்லூரி வகுப்புக்களுக்கும் பாடமாக்கி ஆசிரியரை ஊக்குவிப்பது நமது கடமையாகும்.

சுப்பிரமண்ய புரம். ப. துரைக்கண்ணு முதலியார்
24-1-58