பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{労(} காலமும் கவிஞர்களும் ஒரு சிறந்த அறிஞர். நூலின் தொடக்கத்தில் கலைமகள் வணக்கத்தில் அக் கடவுளே, வேதத் திரு விழியாள் ,- அதில் மிக்கடல் லுரையெனும் கருமை யிட்டாள் :

  1. மதியே-துதல் தனே யேகுழல் என்று டையாள்;

தக்க மெனுஞ்-செவி பத்தநற் றுணிவெனுந் தோ டணிந்தாள்: போதமென் னுசியி னுள்-நலம் பொங்குபல் சாத்திர வாயு டையாள்: கற்பனேத் தேனித ழாள்-சுவைக் காவியம் எனுமணிக் கொங்கை யிளுள்' என்று கூறியிருப்பது புரட்சிகரமான முறையில் புதிய கற்பனேகளைக் கையாண்டு வெற்றி பெற்றதாகும். தெருவில் ஊசிகளும் பாசிமணிகளும் விற்றும் பிச்சை யெடுத்தும் கிரிகின்ற பெண்கள், 'மாயக்காரனம்மாகிருஷ்ணன்-மகுடிக்காரனம்மா’ என்ற நடையில் சில இடங்களில் காப்பியத்தை அமைத்திருப்பது அதனே மிகவும் சுவையாக்கியுள்ளது. மாயச் சூதி னுக்கே -ஐயன்-மனமி ரங்கி விட்டான்' என்று தொடங்கும் சூதாட்ட வருணனைப் பகுதிகள் மிகவும் கனிந்த த டகத் தன்மையுடன் மிளிர்கின்றன. சில இடங்களில் காப்பியத்தில் அமைந்துள்ள வருணனைப் பகுதிகள் மிக அற்புதமாகச் சொற்கள் அமைந்துள்ளன. அழைப்புச் சருக்கத்தில் காணப்பெறும் அத்தினபுரத்தின் வருணனே நொண்டிச்சிந்து மெட் டில் அமைந்து படிப்போரின் இதயத்தைக் கொள்ளே கொள்ளுகின்றது. இப் பாணி புதிய முறையில் தோற்று விக்கப்பட்ட தொன்று. அண்ணனிடம் விடை பெற்று 'அடவி மலை யாறெல்லாம் கடந்து, தூது செல்லும் பொழுது பாரத நாட்டின் பல்வளங்கள் பாங்குறக் காட்டப் பெறுகின்றன.