பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 81 என்று கூறியுள்ளார். இங்குப் பல் குழுவென்பது கருத்து வேறுபட்டால் தோன்றும் பல கட்சிகள் ; பாழ் செய்யும் உட்பகையென்பது ஆறலேக் கள்வர், கோள் சொல்லு வோர் முதலியோர் ; கொல் குறும்பு என்பது சமயம் பார்த்திருந்து அரசாங்கத்துக்குத் தீங்கு பயக்கும் சிற்றர சர்கள், ஆலே முதலாளிகள், வணிக மன்னர்கள் முத லியோர். இன்றைய உலகில் இவை மிகவும் சர்வ சாதா ரணம். நாட்டில் உட்பகை தோன்றும் அறிகுறிகள் காணப்படும்பொழுது அவற்றை இளேதாக முள் மரம் களே தல்போல் களைந்துவிடல் வேண்டும். அறம் என்பது இதுவெனத் தெரியாத கொடியவர்களைத் தொடக்கத்திலேயே அழித்துவிடுதல் சாலப் பயன் தரும். தக்க ஒற்றர்களே வைத்துக்கொண்டால், இதனை எளிதில் அறிந்துகொள்ளலாம். ஒளவையார் என்ற புலவரும் நாடு நாடாக இருந் தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி, பள்ளமாக இருந் தாலும் சரி, மேடாக இருந்தாலும் சரி, அதன் பொருட்டுக் கவலை வேண்டாம் என்றும், அங்குள்ள மக்கள் நல்லவர்களாக இருந்தால் நாடும் நல்லதாக இருக்கும் என்றும் கூறியிருப்பது இவ்விடத்தில் கருதத் தக்கது.

  • நாடா கொன்ருே காடா கொன்ருே

அவலா கொன்ருே மிசையா கொன்ருே எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்ல வாழிய நிலனே." 29 (அவல்-பள்ளம்; மிசை-மேடு.) 20 புறம்-187. 47–7