பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
120

120

மொழி, நடை, உத்தி ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளன் கைக் கொண்டு நிரல்பட சொல்லும் முறையாகும்.

இம் மொழிபெயர்ப்பு முறை மிக அதிகமாகப் பயன்படுவது செய்திப் பரிமாற்றக் கருவிகளாக விளங்கும் பத்திரிகைத் துறையிலாகும். ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழிகளிலோ வரும் செய்திகளை உடனுக்குடன் பெயர்த்து அச்சிட்டு வழங்கும் கடப்பாடுடைய பத்திரிகைத் துறையைச் சார்ந்த மொழிபெயர்ப் பாளர்கள் நேரமின்மையை மனதிற்கொண்டு துரிதமாக மொழி பெயர்ப்பைச் செய்ய நேர்கின்றது. அதே சமயம் சாதாரண படிப்பறிவுள்ள வாசகனும் அந்தச் செய்தியை எளிதாகப் படித் துணர வேண்டும். இந்தக் கருத்தில் செய்தி மொழிபெயர்ப்பு செய்பவர்கள் செய்தியின் அடிப்படையை வைத்துக்கொண்டு தங்கள் போக்கில் செய்தி சொல்லும் வகையில் மொழிபெயர்ப் பார்கள். இத்தகைய செய்திப் பெயர்ப்பு படிக்கும்போது மொழி பெயர்ப்புணர்வு ஏற்படாத வகையில், மூலமாகவே தம் மொழி யில் செய்தி சொல்வது போலிருக்கும். இத்தகைய பொது மக் களுக்கேற்ற, அவர்கட்கு ஆர்வமூட்டும் வகையில் செய்யப்படும் மொழிபெயர்ப்பே பொது மக்களார்வ மொழிபெயர்ப்பு. சொல்லும் செய்தியைத் தவிர்த்து நடை, உத்தி அனைத்தும் மொழிபெயர்ப் பாளனுடையதாகும்.

4. துல்லியமான மொழிபெயர்ப்பு

(Accurate Translation)

மொழிபெயர்ப்பு முறைகளிலேயே மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுவது துல்லியமான மொழிபெயர்ப்பு முறையாகும்.

இதில் மூல மொழியின் சொற்பொருளை பெயர்ப்பதோடு அச்சொல் உணர்த்த விழையும் கருத்தை, உரிய வடிவில் அப் படியே அமைப்பதாகும். இதில் மூலமொழி உணர்த்தும் கருத் தையோ உணர்வையோ சிறிதுகூடச் சிதைக்காமல், மாற்றாமல் பெயர்ப்பு மொழியில் ஆக்கித் தருவதாகும்.

சுருக்கமாகக் கூறுமிடத்து, மொழிபெயர்ப்பாளன் வாயிலாக மூல நூலாசிரியன் முழுமையாகப் பேச வேண்டும். இதில் மொழி மட்டுமே பெயர்ப்பாளனுடையது. மற்றபடி கருத்து, நடை, உத்தி ஆகிய அனைத்துப் பண்புகளும் மூல நூலாசிரியனைச் சார்ந்ததாகவே அமையும்.

இவ்வகையான மொழிபெயர்ப்பே அறிவியல துறைக்கும் சட்டத் துறைக்கும் ஏற்றது. இதில் பெயர்ப்பாளனுக்கு