பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
151

151

அல்லது அதன் சாயலோடு கூடிய கலைச்சொற்களைக் கையாண்டு ஆ ங் கி ல மூலச் சொற்களை அடைப்புக்குள் அமைத்து எழுதிவந்தார்கள்

ஃபிஷ் கிறீன் தமிழ் மொழி வாயிலாக மருத்துவத்தைப் போதிக்க முனைந்த பின்னர் பலப்பல மருந்துவ ஆங்கிலக் கலைச் சொற்களுக்குச் சமமான தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகியது.

மருத்துவத்தைத் தமிழில் கற்பித்த ஃபிஷ் கிறீன்

ஃபிஷ் கிறீன் மருத்துவத்தைத் தமிழில் கற்றுத் தந்தார். தமிழ் வாயிலாக 88 பேருக்கு மருத்துவக் கல்வியைப் பூரணமா கக் கற்பித்துள்ளார் எனக் கூறப்படுகிறது தமிழில் மருத்துவக் கல்வி தர இயலுமா என இன்றும்கூட நம்மில் சிலர் வினாவெழுப் பவே செய்கின்றனர். ஆனால், 140 ஆண்டுகளுக்கு முன்பா கவே அமெரிக்க மருத்துவரான ஃபிஷ் கிறீன் முடியும் என்பதற்கு ஒரு எல்லையாகவே செயல்பட்டு வழிகாட்டிச் சென்றுள்ளார்.

மருத்துவத்தைத் தமிழில் ஆர்வத்தோடு கற்பித்ததுடன் சில முக்கியமான மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வழிகோலிச் சென்றுள்ளார். இரண வைத்தியம், மனுஷ வங்காதிபாதம், கெமிஸ்தம் ஆகிய மருத்துவ இயல் நூல்களைத் தமிழில் தந்துள்ளார்.

கலைச் சொல்லாக்க நெறிமுறை வகுத்த சீலர்

இவற்றில் கையாண்டுள்ள மருத்துவத் தமிழ்க் கலைச் சொற்களை கில நெறிமுறை வளைக் கைக்கொண்டு செய்துள் ளார். அவற்றைச் சுருங்கக் காண்போம்.

முதலாவது, தமிழில் மருத்துவத்தைச் சொல்லும்போது அதற்குரிய கலைச் சொற்களைக் கூடியவரை தமிழிலேயே அமைத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் தமிழ்க் கலைச் சொல், சொல்லோசையும் சொற்செட்டுமுடைய தாக அமைதல் வேன்டும்

இரண்டாவதாக, ஆங்கிலச் கலைச் சொல்லுக்கு இணை யான சொல் தமிழில் கிடைக்கவில்லையென்றால், புழக்கத்தில் வழங்கி வரும் பலரும் அறிந்துள்ள சமஸ்கிருதச் சொல்லை அப் படியோ அல்லது ஒருசில மாற்ற திருத்தங்களுடனோ ஏற்றுப் பயன் படுத்திக் கொள்ளலாம், தேவையின் காரணமாக