பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

171

துள்ளனர். வானொலியும் தொலைக்காட்சியும்கூட அறிவியல் சொல்லாக்க முயற்சியில் பேரார்வம் காட்டி வருகின்றன.

அறிவியல் தமிழ் முயற்சியும் சொல்லாக்கப் பணியும் கடந்த காலங்களில் ஏராளமான மேடுபள்ளங்களைச் சந்தித்து, வலு வோடு வளர்ந்து வந்துள்ளதை அதன் வரலாற்றுப் போக்கில் தெளிவாகக் காண முடிகிறது. இதில் தமிழகத்தைப் போல் இலங் கைக்கும் சிறப்பான பங்கு உண்டு: இன்று அறிவியல் தமிழ் வளர்ச்சியும் கலைச் சொல்லாக்க முயற்சியும் தமிழ்நாடு, இலங்கையோடு அமையாது, சிங்கப்பூர், மலேசிய நாடுகளிலும் சிறப்பாக நடைபெறுவதை மறப்பதற்கில்லை.

அவரவர் போக்கில் கலைச் சொற்களை உருவாக்கிச் செல்வ தால் பாட நூல் எழுதுவோர் அறிவியல் நூல்களை தமிழாக்கம் செய்வோர். அறிவியல் நூல் படைக்கும் எழுத்தாளர் ஆகியோர் எந்தக் கலைச் சொற்களை ஏற்பது என்பதில் மிகுந்த இடர்ப்

பாடடைய நேர்கின்றது.

எனவே, இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கலைச் சொற் களைத் தொகுத்து ஆய்வு செய்து, அவற்றை முறைப்படுத்தி, தரப்படுத்தவேண்டும்.

இதற்கென பல்கலைக் கழகங்களின் உறுதுணையோடும் அரசின் அரவணைப்போடும் கலைச் சொல்லாக்க வல்லுநர் களைக்கொண்ட அமைப்பொன்றை உருவாக்க வேண்டும். இவ் வமைப்பு தனியாட்சியுரிமையுடைய நிறுவனமாக அமைதல் அவ சியம். இக்குழுக்களில் வெறும் டாக்டர் பட்டங்களையோ, தலை மைப் பொறுப்புகளையோ மட்டும் தகுதி அளவு கோல்களாகக் கொள்ளாது, பொருளறிவும் தமிழறிவும் கலைச் சொல் லாக்கத் தில் குறைந்தது பத்தாண்டுகள் பட்டறிவும் பெற்ற திறமையாளர் களையும் தேர்வு செய்தல் வேண்டும்.

உலகளாவிய தமிழர் பங்கு

இக்குழுவில் தமிழ்நாட்டு வல்லுநர்கள் மட்டுமல்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர் அதிகம் வாழும் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கு பெறுதல் வேண்டும். அப்போது தான் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரே மாதிரி யான கலைச் சொற்களைக் கையாள ஏதுவேற்படும்.

இந்நிறுவனம் உறுதி செய்து தேர்ந்தெடுக்கும் சொல்லே அனைவராலும் கையாளப்பட வேண்டும். அனைவரது அங்கீ காரத்துக்கும் உரியதாக இச்சொற்கள் அமைய வேண்டும்.