பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

179

இவ்வறிவியல் செய்திகளைக் கூறும்போது, அதிலும் குறிப்பாக அறிவியல் பொருட்களின் பெயர்களையும் அவற்றை உருவாக்கி யவர்களின் பெயர்களையும் அப்படியே தமிழில் தரவேண்டிய அவசியமேற்படுகிறது. பெருப் லும் இத்தகைய அறிவியல் சொல் பெயர்ப்புகளையும் எழுத்துப் பெயர்ப்புகளையும் ஆங் கிலத்திலிருந்தே பெற வேண்டியிருந்தால், ஒலிபெயர்ப்பும் கூட ஆங்கில வழியே செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.

மொழியும் ஒலிக் குறைபாடும்

பிற மொழிகளோடு ஒப்பு நோக்கும்போது தமிழில் மட்டும் ஒலிக் குறைபாடு இருப்பதாகக் கூறும் குறைபாடு ஏற்கத்தக்க தல்ல. ஒலிக் குறைபாடே இல்லாத மொழி என்று உலகில் எந்த வொரு மொழியும் இல்லை என்றே கூறலாம். ஒவ்வொரு மொழி பும் பிற மொழிகளோடு ஒப்பு நோக்கும் போது ஒலிக் குறைபாட் டினைக் கொண்டதாகவே தோன்றும். இவற்றில் சில மொழிகள் அதிகக் குறைபாட்டினை உடையதாக இருக்கலாம். சில குறைந்த அளவு ஒலிக் குறைபாட்டையுடைய னவாக இருக்க லாம்.

எழுத்துச் சேர்ப்பு அவசியமா?

உலகிலுள்ள பெருமொழிகள் ஏதும் தங்களுக்குள்ள குறை பாட்டினை நீக்கும் பொருட்டு புதிய ஒலிகளை வழங்கவல்ல புதிய எழுத்துருக்களை உருவாக்கிக் கொள்ளவோ அல்லது ஒலிக் குறைவை நிறைவு செய்யும் வகையில் பிற மொழி எழுத்து களை கடன்வாங்கி ஏற்றுக் கொள்ளவோ விழைவ தில்லை

சான்றாக, உலக மொழிகளில் குறைந்த எழுத்துகளை யுடைய மொழியாகவும் மிகப் பலர் அறிந்த மொழியாகவும் உள்ள ஆங்கில மொழி இருபத்தியாறு எழுத்துகளைக் கொண்டே இயங்குகிறது இம்மொழி தனக்குள்ள ஒலிக்குறை பாட்டை நிறைவு செய்ய புதிய ஒலிகளைப் பெறும்பொருட்டு புதிய வரி வடிவங்களை உருவாக்கிக்கொள்ளாததோடு, பிற மொழி எழுத்துகளை ஏற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை.

அதற்கு மாறாக, ஒலிக் குறைவை நிறைவு செய்ய புதிய குறி யீடுகளை மேலும் கீழும் பெற்று, உரிய ஒலிகளை வழங்கும் வகையில் எழுத்துரு மாற்றங்களை ஏற்றுக் கொண்டு இயங்கி வருகிறது.

இதே முறையைக் கடைப்பிடிக்கத் தமிழைப்போல் பழமை யுடையதாக விளக்கும் சீன மொழியும் காலத்தால் பிற்பட்ட