பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

210

கருதப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆரம்பக் கல்வி பெறும் மாணவன் முதல் ஆராய்ச்சிப் பட்டம் பெறும் ஆய்வாளர் வரை எல்லோரது கைகளிலும் இடையறாது தவழப் போவது கையடக்கமான கணினிப் பெட்டிகளாகவே இருக்கும் என்பது திண்ணம். இன்றைக்குக் கணக்குப் பொறி (Calculator) இருக்கு மிடமெல்லாம் நாளை கணினி இருக்கப்போவது நிச்சயம்.

அத்தகைய சூழ்நிலையில் இலகுவாய் கணினியில் இயங்கும் மொழியாகத் தமிழ் அமைய வேண்டாமா? கணினி மொழியாகத் தமிழ் மலர்ந்து மணம் பரப்ப வேண்டாமா?

க்ணினி மொழியாகத் தமிழ்

இன்று நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் கணினி ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, ஜப்பான், ஃபிரெஞ்சு, சீனம் முதலான மொழிகளில் அந்தந்த நாடுகளில் உருவாக்கப் பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் நம் தாய் மொழியாகிய தமிழிலும் கணினி அன்மயவேண்டும் என்பது நம் எல்லோருடைய ஆவலாகும். அதற்கு ஏற்ற வகையில் எழுத்துச் சீர்மையை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைப் பற்றி சிந்திப்பது எல்லா வகையிலும் பொருத்தமானதாகவே இருக்கும்.

இன்று கணினியின் ஆதிக்க மொழி ஆங்கிலமாக இருந்தா

லும் அதனுடன் அந்தந்த நாட்டினரின் தாய்மொழியும் இணைந்தே இடம்பெற்று வருகின்றன.

கணினியில் ஆங்கிலத்தோடு தமிழையும் இடம்பெறச் செய் யும் முயற்சி அண்மையில் இந்தியாவிலும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பெங்களுரில் உள்ள ஐ.பி.எம். (1BM) நிறு வனம் 'பாரதி' எனும் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனத்தைக் கண்டறிந்து வடிவமைத்துள்ளது. அதேபோன்று மலேசியாவி லுள்ள ரவீந்திரன் எனும் தமிழ் இளைஞர் 'துணைவன்" எனும் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனத்தைக் கண்டறிந்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த முத்தெழிலன் எனும் தமிழ் இளைஞர் 'முரசு’ எனும் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனத்தை வடிமைத் துள்ளார். இவையனைத்தும் ஆங்கிலத்தோடு தமிழும் இயங்கும் வண்ணம் அமைந்துள்ளனவாகும். இத் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனங்களில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தபோதிலும் கணினி