பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
225

9.25

இன்று அறிவியல் தமிழ் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சில இலக்கண விதிமுறைகளைப் பின்பற்ற இயலாத நிலை ஏற்பட்டு வருகிறது. இஃது தவிர்க்க முடியாத நிலையாகவும் உள்ளது. சான்றாக, தமிழ் இலக்கண விதிப்படி ட, ர, போன்ற எழுத்து கள் மொழி முதல் எழுத்துகளாக வராது. ஆனால், ரேடார்’ ‘ரப்பர் போன்றவற்றின் ஒலி பெயர்ப்பை உள்ளது உள்ளவாறே சொல்ல வேண்டியுள்ளது. இவற்றை உயிர் இணைத்து "இரேடார்’, ‘இரப்பர்’ என்றெல்லாம் கூறுவது நகைப்புக்கிட மாக அமையும்.

அறிவியலுக்காக நெகிழ்வடையும் தமிழ் இலக்கணம்

அறிவியலைப் பொருத்தவரை தமிழ் இலக்கண விதிமுறை களில் சற்று நெகிழ்வான போக்கே பின்பற்றப்பட வேண்டும்.

தொல்காப்பிய இலக்கணப்படி மொழி இடை, இறுதியில் மட்டுமே மெய்ம்மயக்கம் ஏற்பட முடியும். மொழி முதலில் மெய்ம்மயக்கம் ஏற்படாது. ஆனால், இன்று அறிவியலைப் பொருத்தவரை மொழி முதலிலேயே மெய்ம்மயக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

புத்திலக்கணம் உருவாவது காலக் கட்டளை

இத்தகைய சூழலில் இலக்கண விதிமுறைகளில் நெகிழ் வடைந்து, புதிய முறையில் அமைந்து வளர்ந்து வரும் எழுத்து, சொல் இலக்கணங்களைச் செம்மைப்படுத்தி புதிய இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும். தொல்காப்பியத்திற்குப் பின்னர் ஏற்பட்ட மாற்ற திருத்தங்களை ஏற்று நன்னூல் இலக்கணம் ஏற்பட்டதுபோல், இக்காலத்தில் தமிழ் இலக்கணத்தில் ஏற் பட்டுள்ள மாறுதல்களைச் செம்மைப்படுத்தும் வகையில் புதிய தமிழ் இலக்கணம் வகுக்கப்பட வேண்டும். அஃது இன்றையத் தேவையை நிறைவு செய்வதற்காகவன்றி, நாளை மிகு வளர்ச்சி பெறவிருக்கின்ற அறிவியல் தமிழ் வளர்ச்சியை முறைப்படுத்த வும் வளப்படுத்தவும் ஏற்புடையதாய் அமையும். இத்தகைய புத்திலக்கணத்தையே இன்றைய தமிழ் தேடிக் கொண்டிருக்

கிறது.