பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
224

224

ஏற்பட்டதன் விளைவாக, இலக்கண விதிமுறைகளிலும் மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டன. காலம் ஏற்படுத்திய இம் மாற்றங்களை அடியொற்றி நன்னூல் இலக்கண நூலை பவணந்தியார் எழுதினார். அந்நூலில் காலப்போக்கில் மொழி யிலும் இலக்கண விதிமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதும் புதுமுறைகள் உருவாவதும் தவிர்க்க முடியாதது என்பதை,

"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல. கால வகையினானே'

என்ற சூத்திரத்தின் மூலம் கூறினார்

தொல்காப்பியத்தில் மொழி முதலில் வாராத எழுத்துகள், மொழி இறுதியில் இடம் பெறாத எழுத்துகள் பற்றியெல்லாம் இலக்கண விதிகள் வகுத்துக் கூறப்பட்டுள்ளன. இதன்பின், இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் இவ்விலக்கண விதி முறைக்கு மாறாக, மொழிமுதலில் வாரா ச.ய போன்ற எழுத்துகள் மொழி முதலில் வரும் எழுத்துகளாக இடம் பெற்றன. சமணர், யவனர் பேன்ற சொற்கள்வ ழக்கிற்கு வந்ததால், இடைக்காலத் தில் நன்னூலார் 'ச'வும் 'ய'வும் மொழி முதலில் வரும் எழுத்து கள் என இலக்கணம் வகுக்கலானார்.

ஆங்கிலம் கொண்டு வ்ந்த இலக்கண குடுயீடுகள்

காலப்போக்கை அனுசரித்து ஆங்கிலம் போன்ற பிற மொழி களின் செல்வாக்கின் விளைவாகத் தமிழ் இலக்கணங்களில் கூறப்படாத பல புதிய குறியீடுகள் புதிய இலக்கணக் கூறுகளா கத் தமிழில் வந்து புகுந்து நிலையான இடத்தைப் பெற்று விட் டன. இக்கூறுகள் இன்று தமிழ் இலக்கண விதிமுறைகளாலும் உருமாற்றம் பெற்றுவிட்டன. அவைகளில் குறிப்பிடத் தக்கவை சொல் இண்ைப்புக் குறியீடுகளான காற்புள்ளி(,), அரைப் புள்ளி (;), முக்காற் புள்ளி (), முற்றுப்புள்ளி (), கேள்விக்குறி(?), உணர்ச்சிக் குறி (!) இரட்டை மேற்கொள் குறி(') ஒற்றை மேற்கோள் குறி(' '), தொடர் விடுநிலைக் குறி(......), விடுகுறி (...), உடுக்குறி (*), இடைப்பிறவரல் சிறுகோடு(-...-), பிறைக் குறி (),பகர அடைப்பு(II) ஆகிய குறியீடுகள் ஆகும்.

தமிழ் நெடுங்கணக்கு எண்களாகிய க,உ.அ,எ,ய போன் றவைகட்குப் (இவ்வெழுத்து எண்களே பிற்காலத்தில் அராபிய எண்களாக உருமாற்றம் பெற்றன என்பர்)பதிலாக ஆங்கில வழிவந்த அராபிய எண்கள் 1,2,3,4,6 ஆகியன தமிழில் வழங்கி வருகின்றன.