பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
223

228

இருந்தது என்பதை அடுத்தடுத்து வந்த பிங்கல நிகண்டுபோன்ற நிகண்டு நூல்களில் வருகை வாயிலாக அறிய முடிகிறது.

முந்தைய நிகண்டு நூல்களை ஆராய்ந்து அவற்றின் சாரத் தோடு அக்காலத்தில் வழங்கிய சொற்களையும் இணைத்து "சூடாமணி நிகண்டு என்ற பெயரிலே மண் புருடர் என்பவர் இயற்றியுள்ளார். செய்யுள் வடிவிலான நிகண்டுகளை மனனம் செய்து கொண்டால் மட்டுமே தேவையானபோது சொற் பொருள் விளக்கம் பெறமுடியும்.

ஆங்கிலேயர் வரவால் லிரிந்த தமிழ் இயல்கள்

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உரைநடை புதிய வடிவ மாக அமைந்து தமிழ் வளர்ச்சியை வேகமாக முடுக்கி விட்டது. சிறுகதை, நாடகம், ஓரங்க நாடகம், திறனாய்வு, அறிவியற் கலைகள் எனத் துறைகள் பலவாக விரிந்துகொண்டே சென்ற போது, சொல்லாட்சிக்கென அடிக்கடி சொற் பொருள் அறிய வேண்டிய அவசர அவசியத் தேவை ஏற்பட்டது.

வீரமாமுனிவரின் சதுரகராதி'

அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் சிறந்த முறையில் விளங்கிவந்த உரைநடையிலான அகராதி முறையை அடி யொற்றி முந்தைய நிகண்டுகளில் கூறப்பட்ட சொற்களை யெல்லாம் அகர வரிசையில் தொகுத்து அவற்றிற்கு நேரிடை யான பொருள் விளக்கம் அளிதது சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் வெளியிட்டார். இவ்வகராதியே பிற்காலப் பேரகராதிகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்தது.

இவ்வாறு ஒவ்வொரு கால கட்டத்தின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலேயே இலக்கண நூல்கள். அகராதிகள் இயற்றப்பட்டு வந்துள்ளன என்பதே கடந்தகால வரலாறு.

காலம் ஏற்படுத்திய இலக்கண மாற்றங்கள்

காலப் போக்கில் இலக்கியம் போன்ற துறைகளில் ஏற்படும் மாற்றங்களைவிட இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிக மெதுவாகவே ஏற்படும். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தொல்காப்பிய இலக்கண நூல் எழுதப்பட்டது. அதன் பிறகு மொழியிலும் எழுத்திலும் இலக்கியத்லும் பற்பல மாற்றங்கள்