பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
222

222

முறைகளையும் வகுத்தளித்துள்ளார். இதன் விளைவாக வட மொழி போன்றவற்றின் விதிமுறைகளும் இலைமறைகாயாகத் தமிழ் இலக்கண நூலில் இடம்பெற வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டது. இவ்வாறு தமிழ் மொழிக்கென உருவான இவ் விலக்கண நூல், பிறமொழி இலக்கண விதிமுறைகளுக்கேற் பவும் வடிவம் பெறலாயிற்று.

பொருள் இலக்கணம் ஏற்கா பவணந்தி

தொல்காப்பியம் மொழிக்கு மட்டும் இலக்கணம் கூறாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக் கூறியது. ஆனால், பவணந்தி முனிவரின் நன்னூல் இலக்கண நூல் எழுத்து, சொல் ஆகியவற்றிற்குக் காலப் போக்கை அனுசரித்து இலக் கணம் வகுத்துக் கூறியுள்ளதே தவிர, தொல்காப்பியத் ல் காணப் பட்ட பொருள் இலக்கணம் நன்னூலார் கால சமுதாய அமைப்பு முறைக்குத் தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டமையால் நன் னுரலில் பொருள் இலக்கணம் கூறப்படவில்லை

இவ்வாறு, தொல்காப்பியனார் காலத்துக்குப் பின்னர் வழக் கற்றுப் போன இலக்கண விதிமுறைகளை அறவே விடுத் தும், இடைக்காலத்தில் தேவையின் காரணமாக தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்துக் கொண்ட இலக் கணக் கூறுகளைச் சரியான போக்கில் செம்மைப்படுத்தியும் வரன்முறையோடு கூடிய இலக் கணமாகத் தமிழில் அமைந்ததே 'நன்னூல் இலக்கண நூல்.

தமிழில் நிகண்டு நூல்களின் தோற்றமும் வளர்ச்சியும்

சொற்களின் நேர் பொருள்களை விளக்கும் நூல்கள் வட மொழியில் இருந்ததே தவிர, தமிழில் எந்த நூலும் இருந்ததாகத் தெரியவில்லை. இக்குறையை நிறைவு செய்ய வேண்டும் என்று பேரவாக் கொண்ட வடமொழியறிந்த தமிழ்ப் புலவர்கள் தேவை யின் காரணமாக நிகண்டு நூல்கள் எழுதலாயினர்.

அவ்வகையில் எழுந்த முதல் நிகண்டு நூல் எட்டாம் நூற் றாண்டில் வாழ்ந்த திவாகார முனிவரால் இயற்றப்பட்ட "திவாக ர நிகண்டு ஆகும். செய்யுள் வடிவிலான இந்நிகண்டு சங்கச் சான்றோர்களின் இலக்கிய இலக்கணங்களில் பயின்று வந்த சொற்களுக்குப் பொருள் விளக்கம் தரும் முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் இயற்றப்பட்ட செய்யுட்கள் எளி தாக மனனம் செய்யக்கூடியனவாக அன்றையச் சூழலில் இத் தகைய அகராதிப் போக்கிலான நூல் அவசியத் தேவையாக