பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70

இவ்வாறு சங்க காலத்தில் சாதாரண மக்களது வாழ்வின் பின்னணியாகப் புலவர்களால் கூறப்பட்ட இயற்கை காட்சி களும் வர்ணனைகளும் பக்தி இயக்க காலத்தில் இறைவனுக்கும் இறையில்லத்துக்குமாக உருமாற்றிக் கூறப்படலாயின. இவ் வகையில் பக்தி இயக்கப் பெரியார்களான நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பலவகையிலும் விரிவும் நெகிழ்ச்சியுமுடைய தாகத் தமிழும் இலக்கியமும் பேணி வளர்க்கப்பட்டன.

நாட்டுப்புற பாடல்வகை இலக்கிய வடிவெடுத்தல்

இலக்கியத்தின் கருப்பொருளில் மட்டுமல்லாது அத்ை எடுத்துச் சொல்லும் முறையிலும் புதுமையைக் கையாண்டு பக்திப் பாடல்களை புனையலா யினர். அக்கால மக்களின் அன்றாட வாழ்வில் இழையோடிக் கொண்டிருந்த குயில், உந்தி, ஊசல், பாவை, பள்ளியெழுச்சி, அம்மானை போன்ற நாட்டுப் பாடல் வடிவிலான இலக்கியவடிவங்களைக் கொண்டு மாணிக்க வாசகர், தொண்டதுடிப்பொ டியாழ்வார், பெரியாழ்வார், ஆண் டாள் ஆகியோர் பக்திப் பனுவல்களாகப் பாடல்புனைந்து மக்க

விலக்கியமாக மாற்றி மேலும் இலக்கியத்தை எளிமைப்படுத்த லாயினர்.

இக்கால கட்டத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கிய உத்தி நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் தமிழில் கை யாளப்பட்டது. அது, பழையகாதல் துறைகளை அடித்தளமாகக கொண்டு புதுவகையான பா வகைகளைக் கையாண்டு பக்திப் பாடல்களை எழுதும் உத்தியாகும் அது இவ்வகையில் கோவை, உலா, மடல் என்ற பெயர்களிலே இலக்கியப் படைப்புகள் உரு வாக்கப்பட்டன.

இவ்வாறு காதல் துறைகளே பக்தியுணர்வூட்டும் துறை களாகக் காலப் போக்கை அனுசரித்துக் கையாளப்பட்டது

சமயக் காப்பிய எழுச்சி

சங்க காலத்தை அடுத்துக் காப்பிய காலம் அமைந்தது போன்று பக்தி இயக்க காலத்திலும் மீண்டும் காப்பியங்கள் எழுதப்படலாயின. வடமொழியில் உள்ள காப்பியங்களே தமிழ் வடிவில் கொடுக்கப்பட்டன. இவைகள் சமயச்சார்புடைய காப் பியங்களாகவே அமைந்தன. இவைகளுள் குறிப்பிடத்தக்க பேரி லக்கியங்களாக அமைந்தவை சீவக சிந்தாமணி, சூடாமணி, கம்பராமாயணம் ஆகியவைகளாகும்.

இவற்றுள் கம்பராமாயணம் இலக்கியத் தரத்தில் மிக உயர்ந்து மூல நூலைவிட பன்மடங்கு சிறப்புடைய பேரிலக்கிய மாய் தமிழில் அமைந்தது.