பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
71

71

இக்காலத்தையொட்டி தமிழில் முதல் நூலாக முகிழ்த்தது சேக்கிழாரின் செந்தமிழ்க் காப்பியமான பெரிய புராணம்’ ஆகும். சைவ சமய நாய ன் பார்களின் விரிவான வாழ்க்கை வர லாற்று நூலாக அமைந்த இக் காப் வியத்தின் வர்ணனைப் பகுதி கள் பலவும் புதிய போக்கில் அமைந்தனவாகும்.

சிற்றிலக்கிய, தலப்புராணப் பெருக்கம்

பேரிலக்கியங்கள் இயற்றப்பட்ட அதே காலகட்டத்தை யொட்டி புதியபுதிய வடிவங்களில் சிற்றிலக்கியங்கள் பலவும் எழச் செய்தன இரட்டைமணி மாலை, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பக ம என்பனவாகும் அவை இக்காலத்தில்தான் பரணி வகை இலக்கியங்களும் படைக்கப்பட்டன

சேக்கிழாரின் பெரிய புராண வருகைக்குப் பின்னர் கடவுளர் வரலாறு கூறும் நூல்கள் தமிழில் பல்கிப் பெருகின. இதன் விளை வாக ஒவ்வொரு ஆலயத்திலும் இடம்பெற்ற கடவுள் வரலாறைக் கூறும் “தலபுராணங்கள் பலப்பல எழுதப்பட்டன.

பல்கிப் பெருகிய பாலுணர்வூட்டும் இலககியங்கள்

முற்காலக் காதல் பற்றிய பாடல்களில் காணப்பட்ட சிறப் பும் உயர் பண்பாட்டுத்திறமும் இக்காலகட்டத்தில் எழுந்த காதல் வர்ணனைகளில் காண இயலாதனவாக ஆயின. மனப் போராட்டத்தையும் காதலின் உயர்வையும் காதலர்களுக் கிடையே வலுவாயமைந்திருந்த தியாக உணர்வுகளுக்கு மாறாக, பெரும்பாலான காதற்பாட்டுக்களில் பாலுணர்வை ஊட்டும் காம வுணர்ச்சிகளே மிக்கிருந்தன. ஏங்கும் உள்ளப் பசியை வெளிப் படுத்துவதற்கு மாறாக வெறும் உடற்பசியை விண்ைெரப்பன வாகவே பெரும்பாலான பாடல்கள் உருவாயின என்பது ஒரு கசப்பான உண்மையேயாகும்,

சித்தர்களின் மெய்ஞ்ஞான இலக்கியங்கள்

இக்கால கட்டத்தில் சித்தர்கள் எனும் மெய்ஞ்ஞானிகள் பெருமளவில் மெய்ஞ்ஞானப் பாடல்கள் எழுதினர். இவர்கள் எழுதிய இலக்கியங்கள் பலவும் மெய்ஞ்ஞான உணர்வை வெல் வேறு வடிவுகளில் வெளிப்படுத்தி, மக்கள் உண்மைகளை உணர்ந்து, தெளியத் தூண்டின.

சித்தர்கள் மெய்ஞ்ஞானத்தைப் பெற விழைந்தவர்கள். கடவுள் ஒருவரே எனும் கொள்கையினர். போலித்தனமான