பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

7

இயற்றமிழ் - இலக்கியத் தமிழாகவும் அறிவியல் தமிழாகவும் அமைந்து வளர வேண்டியது அவசியத்திலும அவசியமாயுள் ளது. இயற்றமிழைப் பிரித்து இரண்டாக்குவதா? என்று சில புலவர் பெருமக்கள் எண்ணுகிறார்கள்.

இன்று நம் வாழ்க்கைப் போக்கும் சூழலும் அறிவியலை மையமாக வைத்தே இயங்கி வருகிறது. எனவே, அறிவியல் அறி வையும் உணர்வையும் ஊட்டி வளர்க்சம் வகையில் தமிழை அறிவியல் மொழியாகவே வளர்க்க வேண்டிய இன்றியமையா கால கடடத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இதற்கேற்ப மொழியிலும் எழுத்திலும் இலக்கணத்திலும் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே. ஆயினும் புலவர் பெரு மக்களில் சிலர் இத்தகைய மாற்ற திருத்தங்களை ஏற்கத் தயங்குகிறார்கள்.

காரணம், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மொழி எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் சங்க கால வடி விலேயே இன்றும் இருந்து வருவது போலவும் அதனைப் போற் றிப் பாதுகாத்தலே தங்கள் தலையாய பணி எனக் கருதுவதாக வும் தெரிகிறது.

அதே சமயத்தில் சமுதாய வாழ்விலும் மொழியிலும் அறி வியல் ஊழிக்கேற்ப மாபெரும் மாற்றங்களை உருவாக்கத் துடிக் கும் புதுமையாளர்களில் சிலர், நீண்ட நெடுங்காலமாகவே எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது இருந்து வரும் தமிழை முற்றாக மாற்றியமைத்து நவீன மொழியாக்க வேண்டும் என தீவிரவாதம் பேச முனைகின்றனர்.

இருசாரார் நோக்கும் போக்கும் தவறான அடிப்படையைக் கொண்டுள்ளது.

அறிவியல் என்பது தமிழுக்குப் புதியதன்று. அறி வியல் தமிழ் வளர்ச்சிக்கு ஆதாரமான மொழி இயல்களாகக் கருதப்படும் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு சொல்லாக்கம், எழுத்துச் சீர்மை போன்றவை தமிழுக்கு முற்றிலும் புதிய இயல்கள் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இவற்றின் அடித்தளம் தமிழில் இருந்தே வந்துள்ளது. தமிழ் மொழி, இலக்கிய, இலக் கண, எழுத்து வரலாற்றை முறைப்படி நுணுகி ஆராய்ந்தால் இஃது தெள்ளிதின் புலப்படும். இன்றைய கால வேகத்திற்கேற்ப இத்துறைகளின் வளர்ச்சியை முடுக்கிவிட வேண்டிய கடப்பாடு இன்று நமக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழோடு ஒத்த பழமையுடைய மொழிகளாக விளங்கிய லத்தீன் போன்ற மொழிகள் வழக்கொழிந்து ஏட்டளவில் இடம்