பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
88

88

சைகையின்றிச் செய்தித் தொடர்பு கொள்வதற்கேற்ற 'ஆன்சி பிள்' (Ansible) என்னும் அதிசயத்தைக் கண்டு டித்துத் பயன் படுத்துகிறான். அதே போன்று ராபர்ட் சில்வர்பர்க் எழுதிய வர்ணத்தைத் திறத்தல் (To open the sky) என்ற நெடுங்கையில் 'திய அறிவியல் சமயத்தின் தலைவர்கள், எதிர்காலத்திற்கு வழி செய்யும் நிகழ்காலத்தை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்குத் தேவையான முந்துரிமைகளைத் தீர்மானிக் கிறார்கள். இந்த முந்துரிமைகள் என்ன தெரியுமா? வானத் தைத் திறந்திடுவதும் அதன் மூலமாக நம் உள்ளத்தைத் திறந் திடுவதுமேயாகும். மற்றொரு புனிதமான "இராமனுடன் * # stůl f” (Rendezvous with Rama) srsör p ssw sw3st) -9.36ðr ஆசிரியர் ஆர்தர் கிளார்க், ஒரு விண்வெளிக் குடியிருப்பை அழ காகச் சித்தரிக்கிறார். மனித முயற்சியை எதிர்நோக்கும் அறை கூவல்களையும் இதில் குறிப்பாக உணர்த்திக் காட்டியுள்ளார். அதே போன்று, கருமேகம் (The Black Cloud) என்ற புதினத்தை எழுதிய ஃபிரட் ஹாயில் என்பவர், ஓர் அற்புதமான அந்திய வாழ்க்கையை விவரிக்கிறார், நமது கோளத்திற்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை சிந்தித்துப் பார்க்க வைப்பதுடன், உயிர்களின் தோற்றம் பற்றியும் மறுபடியும் சிந்திக்கத் துரண்டுகிறார்.

இவ்வாறு நடைமுறையில் இருக்கும் அறிவியல் கண்டு பிடிப்பு உண்மைகளை அடித்தளமாகக் கொண்டு விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையில் கற்பனையாக உருவாக்கப்பட்ட அறிவியல் புனைகதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிற் பகுதியிலேயே பெருமளவில் படைக்கப்பட்டன என்றாலும்கூட, இருபதாம் நூற்றாண்டில்தான் அவை மக்களிடையே போதிய செல்வா க்குப் பெற முடிந்தது. இன்று அறிவியல் பூர்வமாக அமையாத எந்தக் கற்பனைக் கதையையும் மக்கள் ஏற்கத் தயாராயில்லை என்பது வரவேற்கப்படத்தக்க இன்றைய மேனாட்டு நிலையாகும். சாதாரண சமூக காதல் கதைகளும் கூட அறிவியல் பூர்வமான அணுகுமுறையோடு அமைய வேண் டிய சூழ்நிலையே அங்கு உருவாகியுள்ளது.

அசலும் நகலும்

ஆனால், அத்தகைய அறிவியல் புனைகதைகள் தமிழில் முளைவிடத் தொடங்கியது அண்மை ஆண்டுகளில்தான் என்பது எண்ணிப் பார்க்கவேண்டிய ஒன்றாகும். அதுவும் ஆங் கிலத்தில் வெளிவந்த அறிவியல் புனைகதைகளின் செல்வாக் காலும் தாக்கத்தாலும் அவற்றின் சாயலில் கதைகள் புனையப்