பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
87

87

அறிவியல கற்பனை பில் ஆகாயக் கோட்டை

அறிவியல், தொழில் நுட்பக் கூறுகளின் அடிப்படையில் கற்பனைகள் அமைவதுண்டு. அத்தகைய கற்பனைக் காட்சி கள் அல்லது செய்திகள் உண்மைபோல் தோற்றம் பெறுவ துண்டு. சான்றாக, புறநானூற்றில் (பாடல் 89) தூங்கெயில்’ எனும் ஆகாயக் கோட்டை (Air Castle) பற்றிய செய்தியுண்டு. அதனை இயக்கும் தொழில் நுட்பத் திறனுள்ள மன்னன் செம்பியன் என்பதை தூங்கெயில் எறிந்த தொடுதோட் செம்பி ன்' என்ற தொடரால் அறிகிறோம். இதனை இன்றைய விண்வெளி நிலையம் (Space station) போன்றதாகக் கூட கொள்ளலாம். அப்படியொரு ஆகாயக் கோட்டை இருந்ததா இல்லையா என்பது தெரியவில்லை ஆனால் தொழில் நுட்பத் திறனோடு அறிவியல் அடிப்படையில் அப்படியொரு கற் பனையை புறநானூற்றுப் புலவர் செய்துள்ளார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

அன்றைய அறிவியல் கற்பனை இன்றைய உண்மை

மேனாட்டி ல், அறிவியல் அடிப்படையிலான கற்பனைக் கதைகள் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளன. சில கற் பனைக் கதைகள ல் விவரிக்கப்பட்டுள்ள சாதனங்கள் பிற்காலத் தில் ஒருசில திருத்தங்களுடன் உருவாக்கப்பட்டு, அறிவியல் கண்டுபிடிப்புச் சாதனமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரலாற்றில் காணும் செய்திகளாகும்.

அத்தகைய அறிவியல் நெடுங்கதைகள், சிறுகதைகள் ஆகிய வற்றை ஹெச் ஜி.வெல்ஸ், ஐசக் அசிமோவ், பால் ஆண்டர்சன், ப்ராட்பரி, ராபர்ட் ஹைன்லைன், ஜூல்ஸ் வெர்ன் போன்ற அறிவியல் எழுத்தாளர்கள் எத்தனையோ அறிவியல் சிறுகதை களையும் நெடுங்கதைக ளையும் ஆங்கிலத்தில் படைத்துஉலகுக்கு வழங்கியுள்ளார்கள். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளின் விரிவாக்கமாக, அவற்றின் அடிப்படையில் கற்பனையாகப் பல அறிவியல் சாதனங்களை நம்பத்தக்க வகையில் இக்கதைகளில் படைத்து இலக்கியங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.சான்றாக, உர்சுலா லி கின் எழுதிய விடுவிக்கப்பட்டவர்'(The Dispossessed) எனும் அறிவியல் நெடுங்கதையில் வரும் கதாநாயகன் ஷிவக்ஒரு விஞ்ஞானி. அவன் தான் வசிக்கும் கோளத்தில் அண்டைக் கோளத்திற்குமிடை செய்தித் தொடர்பை மேம்படுத்த முயல் கிறான். அண்டைக் கோளத்துடன் மட்டுமின்றி, விண்வெளி மண்டலத்தில் தொலைதுாரத்திலுள்ள கோளங்களுடன் கூட