பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 நாடு உடையணன் எங்களைப் பத்துப் பேரையும் காங்கய நாட்டுச் சரவண காங்கேயன் பார்த்துச் சொன்ன வசனம் கனகபுரத்து நஞ்சையன் மகன் லிங்கையன் வானியாற்றில் அணைகட்ட வேணுமென்று நம்மையுந் தாவு துறை பார்த்து வரச் சொல்ல வேணுமென்று யீரோட்டுக்கு யெங்களை அழைத்துக்கொண்டு போய் வானியில் தாவுதுறை அணை கட்டுகிறதற்குப் பார்த்த இடத்தில் வெள்ளோட்டிலிருக்கும் வெள்ள வேட்டுவன் பாளையக்காரன் யென்னுடைய எல்லையிலே தாவுதுறை பார்க்கிறதென்ன அணை கட்டு கிறோமென்று பேசுகிறதென்ன நீங்கள் அணைகட்ட வேண்டாமென்று பிலத்துடனே மறித்தான். அதன் பிறகு நாங்கள் பத்துப் பேரும் ஈரோட்டுக்கு வந்து அதுக்குத் தக்கின சோமாசிகளை அனுப்பிவச்சு வெகு பிரீதியுடனே சொல்லக் கேளாதபடியினாலே இவனுடைய கெருவத்தையடக்கி அந்தத் தாவில் அணை கட்டாமல் விட்டுப் போறதில்லையென்று பிரதிக்கிணை செய்து அவையஸ் தங்குடுத்து ரண்டு மூணு மாச வரைக்கும் அவனுடனே சண்டை செய்து யெங்களினாலே செயிக்க மாட்டாமல் எழச்சுப் போயிருக்கும் வேளையிலே எண்ணை மங்கலம் பதியிலேயிருக்கும் காளியண்ணன், மதுரைக்குப் போய் சமஸ்தானம் ஆளப்பட்ட உக்கிர குமார ராசா சமூகத்துக்குப் போயி வெகுமதியும் கட்டக்கயிரும் வெட்ட வாளும் துஷ்ட சம்மாரமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து கொண்டிருக்கச் சொல்லி வரப்பிரசாதம் வாங்கிக்கொண்டு ஆனைமலை நாட்டு பாளையப்பட்டு செங்கோல் செலுத்திக் கொண்டு இருக்கிற நாளையிலே நாங்கள் பத்துப் பேருங்கூடி காலிங்கராயனை ஆனை மலைக்கு அனுப்பிவிட்டு காளி யணனை யீரோட்டுக்கு வரவழைத்து வெள்ளவேட்டுவன் விருத்தாந்தமெல்லாம் வழிவிபரமாய்ச் சொல்லி அவனைச் செயம்பண்ணி அந்த ஆற்றில் அணை கட்டுகிறபடிக்குச் செயிச்சுக் கொடுக்க வேணுமென்று மெத்தவும் பத்துப் பேருங்கூடி வெகுவிதத்திலே கேட்டுக் கொண்டதுனாலே