பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கொங்கு இருபத்து நாலு நாட்டுக்கும் பட்டக்காரர்களா இருக்கப்பட்டவர்கள் சரி இருப்பும் சரி மரியாதிகளும் கொடுக்கப்படாது என்று சொன்னதினாலேயும் பூர்வத்திலே சேரமான் பெருமாள் சாத்தந்த கோத்திரக்காரர்களுக்கு காவிடிக்கை நாட்டு பிறவுத்வம் பண்ணிக்கொடுத்து இருக்கிற படினாலேயும் ராயட்டுப் பட்டக்காரர்கள் சரி மரியாதி நடக்க மாட்டாதென்று சொல்லிக்கொண்டபடியினாலே வெள்ளோடுவிட்டு மனவெறுப்பினாலே ஆனைமலை சருவுலே தங்கள் காணியாட்சியான காவிடிக்கா நாடு காடு கொண்டு வனமாய் இருந்த ஸ்தலத்தில் தங்கள் பசுமாடுகளை விட்டுயிருந்து மாடுகளை சம்ரட்சணை பண்ணுகிறதுக்காக தங்கள் ஜனங்கள் இருந்தபடியினாலே காவிடிக்கா நாட்டு வனத்து வந்து மாடுகளையும் பார்த்து மாடுகளுக்கு சம்ரட்சணைக்காகப் பட்டிகளும்போடுவிச்சு அஞ்சாறு சாலைகளும் கட்டிவிச்சு கொங்கு இருபத்து நாலு நாட்டுக் கும் பாளையப்பட்டுகளுக்கும் இவர்களுச்கெல்லாம் அதிக மரியாதைகள் உண்டு பண்ணிக்கொள்ளவேணு மென்று நினைச்சு ராய சமஸ்தானத்துக்குப் போனார். ராயர் பேட்டி ராய சமஸ்தானத்தில் காத்துக்கொண்டிருக்கும் நாளை யில் பண்ணிரண்டு வருஷம் வரைக்கும் ராயரவர்கள் பேட்டி யில்லாமல் கையிலே கொண்டு போன திரவியங்கள் எல்லாம் செலவழிந்து போய் கஷ்டப்பட்டுக்கொண்டு அதிவிசனத்தை அடைந்தவனாய் தன்னுடைய இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொண்டு மன வயிரத்தை அடைஞ்ச வனாய் பெனுகொண்டைப் பட்டணத்துக்கு வெளியிலே தென்புறம் காளி கோவிலிலே போய் உசெத்திரமாகப் படுத்துக்கொண்டு இருந்தார். சுத்த உபவாசத்துடனே காளி கோவிலிலே இருக்கப் பட்ட காலிங்கக் கவுண்டன் சொப்பனத்திலே பன்னிரண்டா நாள் இராத்திரி ராயர் குமாரனுக்கு சித்தப் பிரமை பிடிச்ச