பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

141) காடுகளையெல்லாம் வெட்டி வச்சு அந்தந்தயிடங்களிலே நீர்ப்பாங்கு உண்டு பண்ணி வீடேத்தி ஊர்களும் உண்டு பண்ணிக்கொண்டு நஞ்சை புஞ்சை நிலங்களும் திட்டப் படுத்தி நாடு வூர் பாளைப் பட்டுக்களுக்கு அரண்மனையிலே அதிக மரியாதைகாரனாய் ஊத்துக்குளி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் அதிதிறமைசாலி களாய் பிரபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தார். இரண்டாவது பட்டம் முதல் 8வரை ரெண்டான் பட்டக்காரனான நஞ்சய் காலிங்கராயக் கவுண்டன் நாள் முதல் எட்டாம் பட்டக்காரனான காலிங்க ராயன் கவுண்டர் நாள் வரைக்கும் ஊற்றுக்குழி பாளையக் காரர் என்று பேர் பிரசித்திப்பட்டவர்களாய் வம்ச பரம்பரையாய்ப் பண்ணப்பட்ட தருமங்களைப் பரிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்திலே ராய சமுஸ் தா னாதிபதிகள் கட்டளையிட்டபடிக்கு சமுஸ்தானத்திலே ஆஜரிலே இருந்து நடந்து கொண்டு மனசு புதாரனாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள். கால்வழியினர் ஒன்பதாம் பட்டக்காரனாகிய நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக் காலத்தில் பாண்டிய சிம்மாசனாதி பதியாகிய விசுவநாத நாயக்கர் எழுந்தருளியிருக்குற நாளையில் சமுஸ்தானத்துக்குச் சேர்ந்து இருந்து பாளையக் காரர்களையெல்லாம் பேட்டிக்குத் தருவிச்சு மதுரைக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்து தட்சிண பிரதேசத் திலே திறன்னவல்லி சீர்மையிலே அஞ்சு கோட்டை போட்டுக் கொண்டு அஞ்சுராசாசளயென்றவாள் சமுஸ் தானத்துப் பிரபுக்களை நிராகரிச்சு யெதிர் பாளையம் போட்டுக் கொண்டுயிருக்கும் நாளையில் அந்த சமயத்தில் நாயக்கரவர்கள் உத்தரவுப்படிக்கு என் சமஸ்தான நஞ்சய காலிங்கராயக் கவுண்டர் சேன சேகரத்துடனே திர்ன்ன