பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 வல்லி சீமைக்குப் போய் அஞ்சு ராசாக்களுடனே யுத்தம் செய்து ஒரு கோட்டையிலே இருக்கிற அஞ்சுராசா வெட்டிப் போட்டு கோட்டையைக் கைவசம் பண்ணிக்கொண்டு யெதிராளிகளையும் கொண்டுவந்து நாய்க்கரவர்கள் சமஸ் தானத்திலே வைத்தார். அப்போ நாயக்கரவர்கள் நீ பராக்கிரமசாலி' என்று நிரம்பவும் சந்தோஷப்பட்டு தங்க னிகளத்திலே சுற தைத்து அதிலே தலைபோல பண்ணிப் போட்டு யெதிராளி தலையென்று காலுக்குப் போடுகுற பிறிதும் கொடுத்து பராக்கிரம நஞ்சய காலிங்க ராயக் கவுண்டர் என்று பேரும் கொடுத்து ஆடையாபரணங் கள் முதலான ஆபரணங்களும் கொடுத்து சகல வெகுமதி களும் பண்ணி மதுரை ஆஸ்தானக் கோட்டைக்கு அன்பத் தோரான் கொத்தளத்துக்கு தலமை வயிக்கும் படியாக நிகுதிசெய்து பாளையப்பட்டு கிராமங்களை சுத்த ஜாரியாக அனுபவிச்சுக் கொண்டு வரும்படியாக நிகுதி செய்தபடியி னாலே அந்த நாள் முதல் பதினெட்டாம் பட்டம் அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் நாள் வரைக்கும் மதுரை சமஸ் தான கர்த்தராகிய நாயக்கரவர்கள் பரம்பரையிலே கட்டு பண்ணின நிகுதி தீட்டுக்கு அரண்மனைக்கு நடந்து கொண்டு வமிச பரம்பரையாய் பாளையப்பட்டு ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தார்கள். பத்தொன்பதாம் பட்டக்காரனான விருமாண்டக் காலிங்கராயக் கவுண்டர் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்து மதுரை சமஸ்தானத்துக்கும் கனுவா இக்கு கீள்ப்பட்ட கெடிகளுக்காக யுத்த சன்னாஹமாகயிருந்தார் கள். இருபத்து மூன்றாம் பட்டக்காரரான நஞ்சிய காலிங்க ராயக் கவுண்டர் நாளையில் கணுவாய்க்கு கீள்பட்ட கெடி கள் எல்லாம் மைசூர் சமஸ்தானத்துக்குச் சேர்ந்துயிருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்துக் கர்த்த ராகிய இம்முடிராஜ உடையாரவர்கள் பேட்டிக்குப் போய் இருக்கும் நாளையில் அக்காலத்தில் மைசூர் சமஸ்தானத்