பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை எண்-4 கும்பினிக் கடிதம் ஊற்றுக்குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டருக்கு 1798 ஆம் ஆண்டு பாலக்காட்டுக் கோட்டை மேஜர் கமாண்டர் எழுதிய கடிதம்1 : ஸ்ரீமன் சகல குண சம்பன்னரான சகல தர்ம பிரீதி பாலகனான பந்து சன சிந்தாமணியனான அகண்டித லட்சுமி பிரசன்னனான வெகுசன பரிபாலகனான நித்தியா தான விநோதரான மகா மேருவுக்கு சரிசமான தீரனான மகா-ா-ா-ஸ்ரீ ஊத்துக்குளி காலிங்கராயக் கவுண்டர் அவர்களுக்கு ராஜமானிய ராஜஸ்ரீ பாலக்காட்டுக் கோட்டை மேசர் கமாண்டர் சேம்சு ரமலீ சாயபு அவர்கள் மெத்தமெத்த சலாம். பெம்பாயில் பவுசுதாற மகாறாச ராஜஸ்ரீ றாசமானிய றாஜஸ்ரீ சகல பவிசுக்கெல்லாம் பெரிய சென்றல் அவர்கள் இற்றியோட்டு சாயபு அவர்கள்............சென்டறால் அட்டலீ சாயபு அவர்கள் மலையாளத்துக்கெல்லாம் கமசல சாயபுதுரை அவர்கள் இவர்களெல்லாம் ஒருமனதாக யோஜனை செய்து நமக்கு அப்பணை தந்தார்கள் உங்களுக் குச் சொல்லச் சொல்லி உம்முடைய காரியத்திலே மெத்த மெத்த சந்தோஷமாய் தங்கள் மனசுலே யென்ன காரியம் வேண்டியிருந்தாலும் வெகுமானப் பட்ட இங்கிலீஷ கம்பெனிக்காரரோடே ராஜியாக இருக்க வேணும் சொல்லி யிருந்த பிரகாரத்துக்கு அதே மேரைக்கு நமக்கு அப்பணை யாச்சுது. 1. தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ள கடிதத்தில் நகல். எண். டி. 3045.