பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந் தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ்காரமாய் இருந்தபடியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என்பேர் விளங்கி இருக்கும்படியாகப் பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான், தாம் கட்டி வைச்ச அணை யோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத் துக்குத் தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி ‘நாசுவன் பாளையம்' என்றும் பேர் விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்தப் பாளையம் சர்வமானியமாகக் கொடுத்தார். தெய்வீகத் தன்மை காலிங்கராயர் தவமிருந்து அணை கட்டிக் கால்வாய் வெட்டினார் என்று சென்னிமலையாண்டவர் பிள்ளைத் தமிழ் கூறுகிறது. | நாட்டுப்பாடல், வானிலிங்கேசுவரர் வே தநாயகி இருவரும் வரம் அருளக் காலிங்கராயர் இத்திருப்பணியை முடித்தார் என்று கூறுகிறது. காலிங்கராயர் கைபீது வேதியர் வடிவில் கனவில் சிவபெருமான் வந்து கூறினார் என்றும், பாம்பு வழி காட்டியது என்றும் கூறுகிறது. இவை அனைத்தும் தெய்வீக சக்தியால் அணை கட்டிக் கால்வாய் வெட்டப்பட்டது என்று கூறப்படுவது குறிப்பிடத் தக்கது. பல பெயர்கள் காலிங்கராயன் கால்வாயைப் பல இடங்களில் ' கோண வாய்க்கால்' என்று அழைக்கின் றனர். கோணல் கோண லாகக் கால்வாய் இருப்பதே அதற்குக் காரணம். ஈரோட்டில் 'காரை வாய்க்கால்' என்று அழைக்கின்றனர். ஈரோட்டில் வாய்க்காலின் கீழே பெரும் பள்ளம் செல்லுகிறது; மேலே