பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

50 கிறது. இது காலிங்கராயனின் பொறியியல் திறத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. காஞ்சியில் கலத்தல் காஞ்சி என்ற பெயரையுடைய நொய்யலாற்றில் தான் காலிங்கராயன் கால்வாய் இறுதியாகக் கலக்கிறது என்று முன்பே கண்டோம். மீ கொங்கில் அணிகாஞ்சி' என்று செந்தமிழ் வல்ல சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்நதியினைப் போற்றியுரைத்துள்ளார் - திருப்பாண்டிக் கொடுமுடிக்குத் தெற்கே காலிங்கராயன் கால்வாயைத் தொடர்ந்து நாம் செல்வோமானால் காலிங்கராயன் கால்வாயின் அளவு சுருங்கியிருப்பதைக் காணலாம். வெங்கமேடு' அருகில் உள்ள நாகமநாயக்கன் பாளையத்தில் மிகச் சுருங்கிக் கழிவு நீர்க் கால்வாய் போல மாறித் தென்கிழக்கில் உள்ள ஆவுடையா பாறை என்றும் ஊரை நோக்கிச் செல்லுகிறது காலிங்கராயன் கால்வாய். ஆவுடையாபாறையில் புகைவண்டிப் பாதையை ஒரு சிறு பாலத்தின் மூலம் கடந்து தெற்கு நோக்கி ஓடி நொய்ய லாற்றில் கலக்கின்றது. இந்த இடத்தின் எதிர்க்கரையில் செல்லாண்டியம்மன் கோயில் இருக்கிறது. காலிங்கராயன் நொய்யலோடு கலக்கும் இந்த இடத்தைப் பொது மக்கள் 'கூடுதுறை' 'கூட்டாற்று மூலை' என அழைக்கின்றனர். இந்த இடத்தில் காலிங்கராயன் கால்வாயின் அகலம் சுமார் 3 அடியேயாகும். கிளைக் கால்வாய்கள் காலிங்கராயன் கால்வாயில் மூன்று கிளைக்கால் வாய் கள் உள்ளன. 1. மலையம்பாளையம் பிரிவு வாய்க்கால் :- காலிங்க ராயன் கால்வாயில் 31.6.430 மைலில் பழனிக்கவுண்டம் பாளையம் அருகே பிரிந்து சுமார் 4 மைல் தூரம் காலிங்க ராயன் கால்வாய்க்கு இணையாகவே க்கு இணையாகவே ஓடி மலையம்