பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 காலிங்கராயன் கால்வாய் விளங்குவதால் புகழ் பெற்றது பூந்துறை நாடு. அப்பூந்துறை நாட்டில் அருளாட்சி செய்பவன் சென்னிமலை முருகப் பெருமான் என்று பாடிப்பரவுகிறார் புலவர். திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் தலைமைத் தலமாக விளங்குவது அறுபடை வீட்டில் ஒன்றாகிய ஏரகம் என்னும் திருச்செங்கோடு. திருச்செங்கோட்டிற்கு யார் யார் திருப்பணி செய்தார்களோ அவர்கள் பெயருடன் அவர்கள் செய்த திருப்பணிகளையும் தனித்தனிச் செய்யுள் வடிவில் தொகுத்துக் கூறுவது திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை என்னும் சிறந்த வரலாற்று நூலாகும். காலிங்கராயன் திருச்செங்கோட்டுக்குச் செய்த திருப்பணியையும் அந்நூல் கூறுகிறது. பசுவின் வடிவாகவும் இலிங்க வடிவும் கொண்டு விளங்கும் நாகமலை என்னும் திருச்செங்கோட்டில் குடிகொண்டுள்ள உமையொருபாகனுக்குக் காலிங்கராயன் ஏழுமா நிலம் ஈந்தான். அதனால் பெரும்புகழ் பெற்றான் என்று அந்நூல் கூறுகிறது. "ஆலிங்க நாகமலை அர்த்தநா ரீசுரர்க்குக் காலிங்க ராயன் எனும் காராளன்-மாலிங்க மென்றேமா மாந்தை நிலமெழுமா வுங்கொடுத்தான் அன்றே புகழ் எய்தி னான் என்பது திருப்பணிமாலைச் செய்யுள் ஆகும். ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு பள்ளர்களின் வாழ்க்கை முறையை ஒட்டிப் பாடப்படும் சுவையான பிரபந்த நூல்களில் ஒன்று பள்ளு. ஈரோட்டில் கோயில் கொண்டுள்ள ஐயனாரப்பன் மீது பாடப்பட்டது ஈரோடு ஐயனாரப்பன் பள்ளு நூலாகும். காலிங்கராயன் கால்வாய்க் கரைமீதே இக்கோயில் அமைந்துள்ளது. அந் க.--5