பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 தமக்கு உரிமையான நிலத்திற்கு எல்லைகளை வகுத்து அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொண்டார். எல்லைப்பள்ளத்திற்குத் தெற்கும் பொன் குலுக்கி நாடு தாளக்கரைப் பள்ளத்திற்கு மேற்கும் மணியாறு கம்பளத் துறைக்குக் கிழக்கும் நல்லுருக்கா நாடு பாலாற்றுக்கு வடக்கும் அவர் நிலம் இருந்தது. கிழக்கு மேற்காக நான்கு காத தூரமும் தெற்கு வடக்காக 2 காத தூரமும் காலிங்க ராயனுக்கு உரிய நிலப்பகுதிகளாக இருந்தன. அப்பகுதியே அவருக்குரிய பாளையமாக அமைந்தது. முதல் காலிங்கராயன் காலத்திலிருந்து அவர் பரம்பரை யில் வந்த பலரும் இந்நிலத்தின் உரிமைகளை அனுபவித்துக் கொண்டு பாளையக்காரர்களாக ஊத்துக்குழியில் அதிகாரம் செலுத்தி வந்தனர். வமிசாவளியும் ஆங்கில வரலாற்று நூலும் முதல் காலிங்கராயர் காலத்திலிருந்து முறையாகப் பாளையப் பொறுப்பை ஏற்ற எல்லாப் பாளையக்காரர் பெயர்களையும் வரிசையாகக் கூறுகின்றன. இரண்டிலும் பெயர்கள் ஒத்து வருகின்றன. 1. காலிங்கராயர் நஞ்சைய காலிங்கராயர் 3. அகத்தூர் காலிங்கராயர் நஞ்சைய காலிங்கராயர் 5. காலிங்கராயர் நஞ்சைய காலிங்கராயர் அகத்தூர் காலிங்கராயர் 8. காலிங்கராயர் 9. பராக்கிரம நஞ்சைய காலிங்கராயர் 10. அகத்தூர் காலிங்கராயர் 11. காலிங்கராயர் 12. நஞ்சைய காலிங்கராயர் 13. விருமாண்ட காலிங்கராயர் 14. அகத்தூர் காலிங்கராயர்