பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 136

கைப்பற்றிவரக் கட்டளையிட்டான். அவனது கட்டளையை நிறைவேற்றும்பொழுது திருவாங்கூரை அவர்கள் தாக்கியதாகத் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இச்செய்தி மற்ற எந்த எழுத்தாளராலும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய செய்திகளைப் பற்றிய உண்மையறிய உள்ளூரில் ஆவணங்களைப் பெற்றிருக்கும் உளளூர்ச் சரித்திர ஆசிரியரையே நாம் நம்புவது சிறந்தது. 1740 பிப்ரவரி அலலது மார்ச் மாதத்தில் ஆரல்வாய் மொழி கணவாய் வழியாக இரண்டு சாகிபுகளின் படைகளும் திருவாங்கூருக்குள் நுழைந்தன எனறு அவர் கூறுகிறார். அவர்களது சொந்த நாட்டிலுள்ள துன்பங்களைக் கேள்விப்பட்டதுமன்றி, திருவாங்கூர் அரசர் அவர்களுக்கு ஏராளமானப் பரிசுகளை அனுப்பியிருந்தமையாலும், அவர்கள் திரும்பிவிட்டார்கள். அவர்கள் கேள்விப்பட்ட துன்பங்கள் மராட்டியர்கள் திருச்சிராப்பள்ளியை நெருங்கியதால் ஏற்பட்டவைகளே என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

ஆர்க்காட்டு நவாபுவின் ஆட்சித் தொடக்கம்

1743 இல் நைசாமே நேரில் பெரும்படையுடன் கர்நாடகத்திற்குள் நுழைந்தான். நைசாமின் வலிமைமிக்க படையை எதிர்த்து நிற்க இயலாத மராட்டியர் திருச்சிராப்பள்ளியையும், மதுரையையும் உடனே அவரிடம் ஒப்படைத்து விட்டனர். இந்தச்சமயத்தில் பங்காரு திருமலை இறந்தான். அவன் மகன் சிவகங்கை நாட்டிலுள்ள வெள்ளைக் குறிச்சிக்குத் திரும்பி விட்டான். அவன் சந்ததியார் இன்றும் அமைதியாய் வாழ்ந்து வருகின்றனர் என்பது கூறப்படுகிறது.

1744 இல் நைசாமால் மராட்டியர்கள் துரத்தப்பட்டதிலிருந்து 1747 அல்லது 1748 வரை மதுரை நாடு, 1744 இல் நைசாமால் நியமிக்கப்பட்ட ஆர்க்காட்டு நவாபுவாகிய அன்வாருதீனின் கட்டளைப்படி அனுப்பப்பட்ட அலுவலர்களால் ஆளப்பட்டு வந்தது. 1749 இல் அவனுக்குப்பின் அவன் மகன் மகமது அலி பட்டத்திற்கு வந்தான். அதுவரை நாயக்கர்களின் வசமிருந்த மாவட்டங்களாகிய திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் ஆர்க்காட்டு நவாபுவின் ஆட்சி தொடங்கிய காலம் 1744 என்று நாம் கூறலாம். என்றாலும், ஆங்கிலேயர் வருகைக்குப்பின் அவர்கள் நவாபுவின் கூட்டாளிகளாகவும் உதவியாளராகவும் மாறும் வரை அவனுடைய ஆட்சி பெயரவில் சிறிது சிறப்புற்று இருந்தது. 1748 இல் சந்தா சாகிபு மறுபடியும் விடுதலை பெற்றான். பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிபுவை ஆர்க்காட்டு நவாபெனவிளம்பரம் செய்தனர். அதனால், தெற்கேயுள்ள மாவட்டங்களில் இந்த இளவரசர் இருவரையும் ஆதரித்த