பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141 கால்டுவெல்

மேலப்பாளையம். அதாவது தெற்கேயுள்ள பாசறை என்று வழங்கப்பட்டது தெரிகிறது. இவற்றுள் இரண்டாவது கூறப்பட்ட பெயரிலுள்ள பாளையம் சாதாரணமாக ஒரு பேட்டையைக் குறிக்கிறது.

பாளையங்கோட்டைக்குக் காவியப் பெயர் மங்கைநகரம் அதாவது மங்கையினுடைய நகரம் என்பது.இப்போது இந்த மங்கை யார் என்பது தெரியவில்லை. பழைய காலத்தில் பாளையங்கோட்டைக் கோட்டை கட்டப்பட்ட இடத்திலே ஒரு நகரம் இருந்ததெனக் கூறப்படும் பழங்கதை இன்னும் நிலைத்திருக்கிறது. அங்குப் பிறந்த ராஜா என்கிற ஒரு சிறிய அரசன் இருந்ததாகவும் அவன் தன்னுடைய பெயரைக் கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பல இடங்களுக்கு வைத்ததாயும் ஒரு நீர்த்தேக்கத்திற்குக்கூட அவன் தன் பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பாளையங்கோட்டையிலுள்ள கோட்டைச் சுவர்களில் பல கற்கள் முன்பு ஒரு காலத்தில் இந்துக் கோவிலின் ஒரு பகுதியாய் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியிருக்கின்ற செதுக்குச் சித்திரங்களும் கல்வெட்டுகளும் இச்செய்தியை நிரூபிக்கின்றன. இந்தக் கோவில் கற்கள் நவாபு காலத்தில் கட்டப்பட வெளிக்கோட்டைச் சுவர்களில் மட்டுமின்றி இந்தியர் ஒருவரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் உள்கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. உள்நாட்டவரால் கொடுக்கப்படும் விளக்கம் வருமாறு:

பாளையன் இந்துவாய் இருந்தபோதிலும் பாழடைந்து கிடந்த கோவில்களின் கற்களைத் தான் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவில்லை. குறிப்பாகப் பாளையங்கோட்டைக்கு ஐந்து மைல் தூரத்திலுள்ள முதுகிருஷ்ணபுரம் என்ற கோவிலைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த பெரிய மதில்சுவரிலிருந்த கற்களை எடுத்துப் பயன் படுத்திக் கொண்டான். கோட்டை கட்டப்படுவதற்கு முன்பே இக்கோவில் சைவனாய் இருந்து வைணவனாய் மதம் மாறிய மயிலேறும்பெருமாள் முதலி என்பவனால் சுமார் நூறு ஆண்டுகட்குமுன் கட்டப்பட்டது.

ஓர்ம் தரும் தகவல்

மற்றொரு நம்பகமான விளக்கம் வருமாறு:

நவாபுவின் ஆட்சிக்காலத்தில் வெளிக்கோட்டை மட்டுமன்றி உட்கோட்டையும் மகமதிய அதிகாரிகளால் கட்டி முடிக்கப்பட்டு, அவர்களாலேயே பலப்படுத்தப்பட்டது. இதற்காகப் பாழடைந்த