பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151 கால்டுவெல்


இதுவரை ஓர்ம் விளக்கியுள்ளார். இக்காலத்தில் அடிக்கடி குறிப்பிடும் பெயராகிய நெல்லித்தங்கவல்லியிலிருந்து நெற்காட்டான் செவ்வல் (நெல்லகாத்தான் செவ்வல்) (நெல்கட்டுஞ் செவ்வல்?) பூரித்தேவர் என்னும் பூலித்தேவரின் தலைமையிடம் என்பதை நாம் அறிய வேண்டும். இப்பெயர் ஆவுடையார்புரம் பாளையக்காரரின் பரம்பரைப்பட்டம். அவன் இப்போது சங்கரநயினார் கோவில் தாலுக்கா என்று சொல்லப்படும் எல்லைக்குட்பட்ட சிறு பகுதிக்குத் தலைவனாய் இருந்தான். அக்காலத்தில் அவன் திருநெல்வேலியின் மேற்குப் பாகம் முழுவதும் தன் திறமையின் புகழால் மிக்க செல்வாக்குடையவனாய் விளங்கினான்.

தன் மொழி பெயர்ப்பாளர்மேல் வைத்திருந்த அளவிலா நம்பிக்கைக் காரணமாக எப்பொழுதும் கர்னல் ஹெரான் மோசம் செய்யப்பட்டு வந்தது அவன் போகூழே ஆகும். பட்டாளம் கோட்டையை நெருங்குவதற்கு முன்பே இந்த மொழி பெயர்ப்பாளன் பாளையக்காரனிடம் சென்று, "ஆங்கிலேயரிடம் பயங்கர பீரங்கிகள் இல்லை. அதனால் அதிக நேரம் அந்த இடத்திலிருந்து தாக்கமாட்டார்கள்” என்ற செய்தியை அறிவித்தான். ஆகையால், பாளையக்காரன் பலம்வாய்ந்த கற்கோட்டையைப் பத்திரமாகக் காத்துக் கொண்டதால் ஆங்கிலேயரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது அசட்டை செய்தான். எனவே, இரண்டு சிறு பீரங்கிகளும் இரண்டு காலாட்பகுதிகளும் பல மணிநேரம் கோட்டைச்சுவரை நோக்கிச் சுட்டன. இந்தத் தாக்குதலுக்குப் பயனில்லாது போயிற்று. ஆகவே, 20,000 ரூபாய் கொடுத்துவிட்டால் பட்டாளம் திரும்பிவிடுமென்ற மற்றொரு செய்தியைப் பாளையக்காரனுக்கு அனுப்பினர். மொழிபெயர்ப்பாளனிடமிருந்து அறிந்த செய்தியை நம்பித் துணிவுபெற்ற பாளையக்காரன், அவர்கள் முதல் நிபந்தனையின் தளர்ச்சியை உணர்ந்து, மிக்க பொறுப்புடன் அவ்வளவு பெரிய தொகை அவன் நாடு முழுவதிலுமிருந்து வசூலித்தாலும் கிட்டாதெனத் தெரிவித்தான். மேலும், பணத்தின் அருமையை அவன் அறிவானாதலால், ஒரு ரூபாய் கூடக் கொடுக்க இயலாதென மறுத்துவிட்டான். (பார்க்க: ந.சஞ்சீவியின் 'வீரத் தலைவர் பூலித்தேவர்' - ந.ச.) இதற்குள் பட்டாளம் முழுவதும் எல்லாத் தேவைப் பொருள்களுக்கும் இடர்ப்பட்டுத் திண்டாடின. சம்பளம் பெறுவதற்காகச் சிப்பாய்கள் கலகம் செய்யவும் தயாராய் இருந்தார்கள். பட்டாளத்தின் உணவுப் பொருள் தேவைகளையும் சம்பளத்தையும் தானே தருவதாக வாக்குக் கொடுத்த மக்புஸ்கான், ஒன்றும் கொடாமல் தட்டி விட்டான். எனவே, பட்டாளம் மதுரைக்குத் திரும்பத்