பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 168


இடங்களிலும் அதிகமாகவே இருந்தது. தரிசு நிலங்களுக்காக விளைச்சல் நிலத்திலுள்ள பயிரைப் பகிர்ந்து கொள்ளும் முறை சட்டப்படி வழக்கத்திலிருந்தது. இது விவசாயிகளுக்குக் குறைவான நலனைக் கொடுக்கும் முறையாய் இருந்தது. ஆனால் அரசாங்கத்திற்குட்பட்ட தாலூகாக்களில் பண குத்தகை முறையே அமுலிலிருந்து வந்தது. இத்தகைய முறையினால் அவர்கள் தங்கள் நிலங்களை மேலும் செம்மைப்படுத்த ஊக்கமளிக்கத்தக்க அளவு இலாபம் கிடைத்து வந்தது.

“மொத்தத்தில் முக்கியமாக ஜமீந்தாரிக்குட்பட்ட வேளாளர்கள் கேவலமான நிலையிலிருந்தார்கள். பருத்தி விளையும் பகுதிகளிலிருந்த வேளாளர் வறுமையை அணுகாதவாறு செல்வந்தராயிருந்தனர். பட்டாக்கள் முசிகர்கள் மாற்றம் பிற்காலத்தில் கட்டுப்பாடாக நீதிமன்றங்களில் வற்புறுத்தப்பட்டன. இதனால், உறுதியும் சுதந்தரமும் கிடைத்தனவாயினும், அதிகப்படியான மோசடியான தொல்லை நிரம்பிய வழக்குகள் நிலச் சொந்தக்காரருக்கும் குத்தகைகாரர்களுக்கும் இடையே ஏற்பட்டன. பணக்குத்தகையே எல்லாத் தரிசு நிலங்களிலும் முழுமையாக விதிக்கப்பட்டது. ஆனால், கணக்கற்ற துன்பமயமான தீர்வைகள் ஜமீந்தார்களுக்கும் குத்தகைக்காரர்களுக்கும் இன்றும் தகராறுகளை உண்டு பண்ணக்கூடிய வன்மையும் தன்மையும் உடையனவாய் உள்ளன.

“முழு மாவட்டத்திலும் 27 விழுக்காடு குறுநில மன்னராட்சி. அங்கு 20 சரியான ஜமீந்தாரிகளும் 36 மிட்டாக்களும் இருந்தன. பழைய ஜமீந்தாரிகளின் தீவினையாலும் ஆய்வின்மையாலும் கடனைக் கட்டுவதற்காக ஜமீன்கள் துண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இந்த ஜமீன்களைச் செல்வந்தர்களான வேளாளர்கள் நாட்டு கோட்டைச் செட்டிகள் மற்றப் பணம் நிறைந்த உள்நாட்டுக் கனவான்கள் யாவரும் வாங்கிக் கொண்டனர். இத்தகைய பகுதிகளே 36 மிட்டாக்களிலும் மிக அதிகமாய் இருந்தன.

“இந்த இருபது ஜமீந்தாரிகளும் அளவில் வேறு பட்டிருந்தன. இவை 863 ஏக்கரிலிருந்து 337,581 ஏக்கர்கள் வரை இருந்தன. ஒரு பீயிஷ்குக்கு 25 ரூபாய் வீதம் மொத்தத்திற்கும் 88376 ரூபாய்கள் வரிவிதிக்கப்பட்டன.

“இதே போல் 36 மிட்டாக்களும் 234 ஏக்கரிலிருந்து 18716 ஏக்கர்கள் வரை இருந்தன. இவை 213 ரூபாய் வீதம் மொத்தத்தில் 6423 ரூபாய்கள் கவர்ன்மெண்டுக்கு வரியாகச் செலுத்தின. (கால்டுவெல்