பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173 கால்டுவெல்


அவனுடைய ஆடுமாடுகளும் மற்ற எல்லாச் சொத்துக்களும் குத்தகைக்கு விடுபவன் வசமாகிவிடும். மறுத்த குற்றத்திற்காக அவன் உயிரிழக்க நேரிடும். அவன் பயிர்கள் முற்றியவுடன் குத்தகைக்கு விட்டவனின் அதிகாரக் கட்டளையின்றி அறுவடை செய்ய எண்ணினால், குத்தகை விட்டவனுடைய வேலைக்காரர் யாவரும் அங்குக் கூடி சித்திரவதை செய்து, அவனிடம் மிஞ்சியிருக்கிற சிறு பொருளையும் அபராதமாகப் பறித்துச் செல்வர். அவன் தன் சிறு நிலத்திலிருந்து ஒரு பகுதியை விற்க எண்ணினால், அரசு இசைந்தால்கூட அவனை விட்டுவிடமாட்டார்கள். தூரத்திலுள்ள கடைவீதிகளுக்கு எதையும் அவன் எடுத்துச் சென்றால் ஒவ்வொரு கிராமத்திலும் அவனை மறித்துச் சுங்கம் வசூலிப்பார்கள் அல்லது அவன் ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ அல்லது விற்கவோ எடுத்துச் செல்லும் எல்லாப் பொருள்களுக்கும் வரிவசூலிப்பார்கள். (இந்தக் குறைபாடு மிக ஆதாரமற்றது; அநீதியானது).

சுங்கச் சாவடிகள்

நாகப்பட்டணத்திற்கும் பாலக்காட்டுச் சேரிக்கும் இடையே முந்நூறு மைல்களுக்குக் குறையாத தூரம் இருக்கிறது. இவ்வழியில் சுமார் சுங்க வரிவசூல் செய்யுமிடங்கள் முப்பது இருக்கின்றன. சுருங்கச் சொன்னால், நாட்டு விளைச்சலை எடுத்துச் செல்லும் ஒவ்வொரு பத்து மைல் தூரத்திற்கும் வரி விதிக்கப்படும், சாகுபடியை மறுக்கின்றவர்களுடைய தண்டனையைப் போலவே விளைச்சலுக்கும் விற்பனைக்கும் ஆபத்தான அழிவு எதிர்நோக்கி இருந்தன.

'ஆனால் இவைகள் குத்தகை விடுபவனுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் ஒரு சிறு பகுதியின் திறனே. குத்தகைக்கு விடுபவன்தன் விருப்பம்போல் நாணய மாற்றின் மதிப்பை இறக்கவோ அதிகரிக்கவோ முடியும். அவன் தானியத்தின் விற்பனையைத் தடுக்கவும் கூடும். அவன் அக்கிரமமான விலைக்கு விற்கவும் முடியும். இவ்வாறு அவன் விரும்பிய போதெல்லாம் அடிக்கடி எங்கும் பொதுப் பஞ்சம் நிலவச் செய்ய முடியும். பொதுச் செலவிலிருந்து வேலைக்காரர்கள் என்ற பெயரில் காப்பாற்றி வரும் பயனற்ற கலகக்காரர்களைத் தவிர, மக்களைக் கொடுமைப்படுத்த இராணுவ பலம் தேவையாக இருக்கும். அத்தகைய உதவியை மறுப்பவர்களைத் தக்கபடி விசாரிக்கக் கீழ் உத்தியோகஸ்தர்கள் உண்டு. யாரேனும் அந்த அதிகாரத்தை எதிர்த்தாலோ இராணுவ உத்தியோகஸ்தர்கள் பலவந்தமாகத் தனி மனிதனைத் துன்புறுத்த இராணுவ உதவி அளிக்க மறுத்தாலோ அல்லது வரிவசூலிக்கும் சூப்பிரண்டு வரிகளை விதிக்கும் சூப்பிரெண்டுகள்,