பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183 கால்டுவெல்


பகுதியில் அவனுடைய வீரர்கள் சூறையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதையும் அவன் அறிவான். தீவினை வசமாக, இந்த ஆத்திரமான சூழ்நிலையில் பிரதிநிதியினுடைய கூலிப்படையிலுள்ள ஐவர், பாசறையிலிருந்த குதிரைகளையும் எருதுகளையும் போல் திடீரெனப் பிடித்துக் கொணர்ந்து யூசுப் எதிரில் நிறுத்தப்பட்டனர். உடனே யூசுப்பு அவர்களைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுக் கொன்றான். இச்செயல் கொடுமையான கொலையாயினும், இந்துஸ்தானத்தில் இது ஒன்றும் புதியதன்று.

கொடுங்குற்றங்களுக்கு இத்தண்டனை தருவது வழக்கந்தான். பிரதிநிதி உடனே, தன் கூலிப்பட்டாளங்களுடன் பாசறையை விட்டு ஓடிவிட்டான். அவர்கள் அடைந்த தண்டனை பூலித்தேவரை ஓரளவு அவர் வாழ்க்கையிலேயே முதன்முதலாகத் தம்மோடு தொடர்பு கொண்டவர்களுடன் சிறிது நேர்மையுடன் நடந்து கொள்ளத் தூண்டியது. ஆனால், மக்புசுகானின் நிலையற்ற புத்தியையறிந்த யூசுப்பு, வழக்கமான எச்சரிக்கையுடன் மதுரையில் ஆங்கிலேயரின் முயற்சிகளையும் உடன்படிக்கைகளையும் அம்பலப்படுத்திவிடுவான் என்று ஐயப்பட்டு, அவனை அங்கு விட்டு வைக்க அஞ்சி, உடனே நெல்லிதங்கவில்லி (நெற்கட்டுஞ்செவ்வல் - ந.ச.)க்குப் புறப்பட்டு வந்து அங்கே தன் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும்படி செய்தான். முடிவில் பூலித்தேவருடன் இருந்த பரக்கத்துல்லா மக்புசுகானை அழைத்துவர ஆளை அனுப்பினான். மக்புசுகான் டிசம்பர் மாத முடிவில் நகரத்திலிருந்து 500 குதிரை வீரருடன் புறப்பட்டான்.

மக்புசுகானின் சூழ்ச்சி

மாதா மாதம் நடந்த ஒவ்வொரு செய்தியையும் விவரமாக எழுதுவதனால் தொல்லையும் இழப்புமே ஏற்படும். எனவே, கருத்தை ஈர்க்கத்தக்க சில சிறப்பான நிகழ்ச்சிகளை மட்டுமே குறிப்பிடுவது நலமாம் என்று அத்தோடு நான் மனநிறைவடைய விரும்புகிறேன்.

மக்புசுகானைப் பூலித்தேவருடன் விட்டுவிட்டுப் பரக்கத்துல்லாவும் நபிகான் கட்டாக்கும் 500 குதிரை வீரருடன் நெல்லித்தங்க வில்லி (நெற்கட்டுஞ் செவ்வல் என்ற ஊரின் உண்மை வடிவத்தைக் கால்டுவெல் உணரவில்லை! - ந.ச)க்குப் புறப்பட்டனர். மலையோரங்களை வரம்பிட்டுச் சென்ற அவர்கள், ஒரு நாள் மாலை வாணிய செவக்கேரி பாளையக்காரன் கோட்டையில் தங்கினார்கள். (வாணிப என்பது 'வன்னியர்' என்று சாதிப்பெயர் அல்லது சாதிப்பட்டத்தைக் குறிக்கிறது. இது மறவர் சாதியைச் சேர்ந்த ஒரு