பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

209 கால்டுவெல்


இல்லை. முக்கியமாக அது பீரங்கிப் பிரயோகத்தில் வலிவுள்ளதாக இல்லை. எனவே பீரங்கிகளுக்காகத் திருச்சிக்கு அனுப்ப வேண்டியிருந்தது. அங்கிருந்த பீரங்கிகள் வந்துபோர் நடந்தும் கூடப் போர் வெற்றி பெறவில்லை. துருப்புகளின் தலைவனாயிருந்த கர்னல் மான்சன் துருப்புகளுடன், 1763 ஆம் ஆண்டு மழைக்காலத்தை மிக்க வசதியுடனும் பாதுகாப்புடனும் கழிக்கத்தக்க இடத்தை நோக்கித் திருப்பிச் செல்ல வேண்டியிருந்தது. ஸ்வார்ட் என்ற புகழ்பெற்ற மதபோதகர் அக்கூடாரங்களுக்குச் சென்று இரண்டு மாத கால முற்றுகையின் போது நோயுற்றவருக்கும், காயம்பட்டவருக்கும் ஆன்ம ஆறுதல் அளித்து வந்தார்.

முற்றுகை நடந்து கொண்டிருக்கும்போது யூசுபுகான் பிரஞ்சுக்காரரின் உதவியைப் பெற முயற்சித்தான். ஆனால் ஐரோப்பாவில் பிரஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் சமாதானம் செய்து கொண்டமையால் யூசுபுக்கு ஆள் உதவியும் போர் தளவாட உதவியும் புதுச்சேரி அரசாங்கங்களால் அனுப்ப முடியவில்லை. ஆனால், பிரஞ்சுக்காரர்கள், 'எங்களுடைய கூட்டாளியான யூசுபை எதிர்ப்பதை நிறுத்த உத்திரவிட வேண்டும். ஏனெனில் எங்களுடைய ஆளை எதிர்ப்பதால் உண்மையில் அது எங்களையே எதிர்ப்பதாகும், என்று ஆங்கிலேய அரசுக்குக் கூறினர். இச்சூழ்ச்சிநிரம்பிய தந்திரத்திற்கு ஏற்ற பதிலை ஆங்கில அரசாங்கம் கொடுத்ததாகத் தெரியவில்லை. முற்றுகை 1764 அக்டோபர் 14 வரை தொடர்ந்து பலவிதமாய் நடந்தது. அதற்குள் மற்றொரு தாக்குதலும் ஏற்பட்டது. அத்தாக்குதலும் தோல்வியுற்றது. ஆனால் பிரஞ்சுப் படைத்தலைவனான மர்ச்சண்ட் தன் ஆற்றலைக் காட்ட சரியான வாய்ப்பு இது என்று எண்ணித் தனக்கும் தன்னைச்சார்ந்தோருக்கும் ஏற்றதாக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக மிகச் சூழ்ச்சியாய், தன் தலைவனாகிய யூசுபுகானையே பிடித்து ஆங்கில அதிகாரத் தலைவனாயிருந்த 'மேஜர் டொனாட் கர்ம்பெல்' லிடம் ஒப்படைத்து விட்டான்.

யூசுபுகான் எவ்வாறு ஒழிக்கப்பட்டான் என்பதைப் பற்றி எழுத்து ஆவணங்களிலிருந்து என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்நாட்டு மக்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாயறிந்த செய்தியைக் கொண்டு நெல்சன் கூறுவதாவது: 'புகழ் வாய்ந்த வெற்றிவீரன், அநேகப்போர்களில் ஈடுபட்டவன், குறிப்பிடத் தக்க பெரும்புகழுடன் வெற்றி கண்டவன், நம்பகமான அவன் வேலைக்காரனால் பிடிக்கப்பட்டு எதிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அவன் எதிரிகள் 1762 மேயில் (தவறு - மேலே காண்க) அந்த வேளையில் அவனது