பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 208


1763 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி யூசுபுகானை எதிர்த்துப் பலம் வாய்ந்த படை ஒன்றை உடனே அனுப்ப வேண்டுமென ஜெனரல் லாரென்ஸ் கம்பெனி அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்தான். இறுதியில் யூசுபுகான் தன்னிச்சையாக வெளிப்படையாய்க் கிளம்பிவிட்டான் என்றும் தெரிவித்திருந்தான். பாளையங்கோட்டை மதுரைக் கோட்டைகள் நிரம்ப அதிக பீரங்கி வெடிக்கருவிகள் சேமிக்கப்பட்டு அவன் வசமிருப்பதாயும் மற்ற சாதாரண கோட்டைகளையும் காக்கத் தக்க நிலையில் வைத்துக் கொண்டிருக்கிறான் என்றும் அறிவித்திருந்தான். அவன் படையில் 27,530 பேர் இருந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுள் கூட 15,000 கூலிப்பட்டாளங்கள் மிகக் குறைவான ஆயுத வசதியுடன் இருந்தனர். மற்றவர்கள் சிறந்த ஆயுதபாணிகளாயிருந்தனர். அவன் 200 ஐரோப்பிய காலாட்படைகளைத் திரட்டுவதிலும் வெற்றி கண்டான். அவர்களுள் அநேகர் பிரஞ்சுக்காரர்கள். 30 பிரஞ்சுத் துருப்புகள் யாவும் மர்ச் செண்ட் என்ற பிரஞ்சுக்காரனின் தலைமையில் விடப்பட்டிருந்தன. அவனுடைய படையின் வசம் 12 அல்லது 14 கனமற்ற போர்க்களப் பீரங்கிகளும், இரண்டு குண்டு பீரங்கிகளும் இருந்தன. இவற்றுள் அநேக பீரங்கிகள் கம்பெனியைச் சேர்ந்தவை. அவன் மதுரையைத் தன் தலைமையிருப்பிடமாக்கிக் கொண்டான். அவன் நாள்தோறும் பிரஞ்சுக்காரரிடமிருந்தும் ஹைதர் அலியின் படையிடமிருந்தும் புதிய படைகளைப் பெற்றுக் கொண்டேயிருந்தான். மகமதுயூசுபு பெரும் பேராசையுடன் துணிவான எச்செயலையும் செய்யத்தக்க மனிதன் என்று எண்ணி, உடனே அவன்மேல் படையெடுத்துச் செல்லாவிடில் அவன் மற்றொரு சந்தாசாகிப்பாகிக் கம்பெனியுடன் மேலும் பத்து ஆண்டுகள் போரிட்டுக் கம்பெனி உரிமைக்கு முட்டுக்கட்டை போடுவான் என்றும் லாரென்ஸ் கருதினான். அத்தகைய பயங்கர கலகக்காரனை ஒடுக்கமான கணவாய்களின் வழியாகவோ, அடர்ந்த காடுகளிலோ மிகச் சிறிய படையுடன் சென்று எதிர்ப்பது நடைமுறையில் இயலாது அல்லது அறிவுடைமை என்று அவன் எண்ணவில்லை. அவன் தேவையென்று கேட்ட படையின் விவரம் வருமாறு: ஐரோப்பிய குதிரைப் பட்டாளம் 163; 10 துப்பாக்கிகளுக்கான பீரங்கி, இரண்டு குண்டு பீரங்கிகள் 100; ஐரோப்பிய இராணுவப்படை அணி 600; காபிரிகள் அல்லது தோபாஸ்கள் (யூரேஷிய சிப்பாய்கள்) 100; கம்பெனிப் பட்டாளம் 50 கூட்டங்கள், தலைவர்களுடன் சேர்ந்த 5000, நவாபின் சிப்பாய்கள் 2000, கருங்குதிரைப்படை 2000. மொத்தம் இவன் கேட்டிருந்த படையினரின் எண்ணிக்கை 9963, அவன் கேட்ட அவ்வளவு படைகளை அவன் பெறவில்லை. வந்த படைகள் போதுமானதாக