பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213 கால்டுவெல்



இயல் - 6



1764 முதல் 1799 வரை திருநெல்வேலி பற்றிய குறிப்புகள்
பகுதி I

யூசுபுகான் மறைவிலிருந்து 1781 இல் வரி உரிமையாக்கப்பட்டது வரை

யூசுபுகானின் மறைவை ஒட்டி ஏற்பட்ட நிகழ்ச்சிகள்

சுமார் 1764 ஆம் ஆண்டு இறுதியில் மதுரையும் யூசுபுகானும் பிடிக்கப்பட்ட பிறகு திருவாங்கூர் அரசனின் திடீர் படையெடுப்பிலிருந்து அவற்றைக் காப்பதற்காக மதுரை தெற்குப்பாகப் படைத்தலைவனாக இருந்த கர்னல் டொனால்டு (Colonal Donald Campbell) திருநெல்வேலிக்குள் படையெடுத்துச் செல்ல மிக்க ஆவலுள்ளவனாயிருந்தான். ஆனால், அரசாங்கத்தினர், திருவாங்கூர் அரசன் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் எதிர்ப்பைத் தேடிக் கொள்ளமாட்டான், களக்காடு மாவட்டங்களைப் பொறுத்தவரை அவர்களது எண்ணத்தை அறிந்து கொள்ளும் வரையிலாவது அவ்வாறு செய்யாதிருப்பான் என எண்ணினார். என்றாலும் அந்தச் சுற்றுவட்டாரத்திலுள்ள வேறு எந்தப் பாசறைகளையும் களக்காடு நாட்டையும் அதிர்ச்சியினின்றும் காப்பதற்காகப் புதிய படை பலத்தை ஏற்படுத்துவது தேவையெனத் தீர்மானித்தனர்.

1765- பாளையங்கோட்டையில் துருப்புகள் தங்குவதற்கான வசதி அளிக்கக் கட்டளையிடப்பட்டது. திருவாங்கூர் அரசன்களக்காடு மாவட்டங்களைத் திரும்பப் பெற முயற்சித்துக் கொண்டிருந்தான். நவாபினுடைய சேனைகள் பாளையங்கோட்டையைக் காக்க நிறுத்தப்பட்டன. காப்டன் ஹார்பார் (Captain Harper) களக்காட்டின் உதவிக்காக ஒரு படையுடன் புறப்பட்டான். மே மாதம் 25 ஆம் தேதி களக்காடு படைக்கலங்கள் தாங்கிய 200 திருவாங்கூர்காரர்களால்