பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223 கால்டுவெல்


மானேஜர் அல்லது நிதி அமைச்சராக அப்போது திருநெல்வேலியிலிருந்த ராஜகுருமத்ராவினால் (Raja Hooroomctrah) செய்யப்பட்டது. மேலும் அவன் வடகரை பாளையக்காரனிடமிருந்து படை உதவியும் பெற்றான். இவ்வடகரைப் பாளையக்காரன் சில நாட்களுக்கு முன் அவனுடைய பாளையம் எல்லாவற்றையும் இழந்துவிட்டான். இப்பொழுது நவாபின் பணியில் அவனை அமர்த்திக் கொள்வதற்காக அவனுக்கு ஒன்பது கிராமங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டன. இது 1767 இல் நடைபெற்றது. இந்தச் சமயத்தில் ஏற்பட்ட மற்ற ஒப்பந்தங்களில் நவாபினுடைய காரியக்காரன் (மானேஜர்) சிவகிரி பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களைத் திருநெல்வேலியிலிருந்து நாடுகடத்திவிட்டு, அவர்களுக்குப் பதில் வேறு பாளையக்காரர்களை நியமித்தான்.செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி ஹைதர் அலியின் படைத் தளகர்த்தன் பாளையக்காரர்கள் அனைவரையும் நவாபுக்கும் அரசாங்கத்தினருக்கும் எதிராகத் தன்னுடன் சேர்த்துக் கொண்டால் பாளையக்காரர்களின் பழைய உடைமைகள் திரும்பிக் கொடுக்கப்படுவதுமன்றி, புதிய சில கிராமங்களும் கொடுக்கப்படுமென எல்லாப் பாளையக்காரர்களுக்கும் தெரிவித்திருப்பதாக அரசாங்கத்தினருக்குச் செய்தி எட்டியது.

1787 ஆம் ஆண்டிலே 95 ஆங்கிலப் புதிய படைவீரர்கள் அன்ஜன்கோவில் வந்திறங்கினர். ஆனால் அவர்களுக்கு மேலும் கட்டளைகள் வரும்வரை அங்கேயே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

1788 பிப்ரவரியில் லெப்டினண்ட், கர்னல் பிரிச்மன், ஐதர் அலியை எதிர்க்கும் போர்க்களத்திலுள்ள படையுடன் சேர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டது. அவனுடைய இடத்தில் காப்டன் பிரெளன் பாளையங்கோட்டை தளகர்த்தனாக நியமிக்கப்பட்டான். கர்னல் பிரிச்மன், காப்டன் பிரெனனுக்குத் தேவையான அநேகப் பாளையக்காரர்களைப் பற்றிய செய்திகளையும் தனக்குத் தெரிந்தவரை கூற வேண்டியதாயிற்று. காப்டன் பிரெளன் நவாபினுடைய மானேஜருக்கு எல்லாவற்றையும் ஒழுங்கான நிலையில் வைத்துக் கொள்ள தன்னுடைய அதிகாரத்திற்குத் தேவையான உதவிகளைப் பற்றித் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

ஜூன் 10 ஆம் தேதி காப்டன் பிரெளன் ஒரு சார்ஜண்ட் தலைமையில் மூன்று கம்பெனிப்பட்டாளத்தை அனுப்பிப் புதிதாக ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டிருந்த ஒரு பாளையக்காரரின் கோட்டையை அழிக்க அனுப்பி இருப்பதாகச் செய்தி அறிவித்தான்.