பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 232




இயல் - 6
1781 இல் வரி விதித்தது முதல் பானர்மன் - பாளையக்காரர் சண்டை தொடங்கும்வரை
பகுதி II

வரிவிதித்தல்

1781 ஆம் ஆண்டின் இறுதியில் கர்நாடக நவாபிற்கும் கிழக்கு இந்தியக் கம்பெனிக்கும் ஓர் ஒப்பந்தம் முடிவாயிற்று. அதன்படி, கர்நாடகத்திலுள்ள மற்ற மாவட்டங்களுடன் திருநெல்வேலியும் கம்பெனிக்காரரின் அரசியல் நிர்வாகத்தின் பயன்களைச் சில ஆண்டுகள் கண்டன. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு அதை நிறைவேற்றத் தேவையான எல்லா ஒழுங்கான முறைகளும் 1781 ஆம் ஆண்டு அக்டோபரில் செய்யப்பட்டன. அந்த ஒப்பந்தம் டிசம்பர் 2 ஆம் தேதி வரை கையெழுத்திடப்படவில்லை. ஆனால் அப்பொழுது ரெவின்யு போர்ட் ஏற்படுத்தப்படவில்லை. (1786 இல் தான் ஏற்படுத்தப்பட்டது). என்றாலும் அக்டோபர் 16 ஆம் தேதி ஒரு கமிட்டியை அரசாங்கத்தினர் நியமித்தனர் இது வரையறுக்கப்பட்ட வருவாய் கமிட்டி என்று அழைக்கப்பட்டது. இதில் ஆறு பெருங்குடி மக்கள் இருந்தனர். அவர்களுள் திருநெல்வேலிக்கு முதல் அரசு அலுவலராக நியமிக்கப்பட்ட ஜியார்ஜ் புரோக்டார் (George Proctor) அவரையடுத்து வந்த புகழ் பெற்ற திரு. ஐல்ஸ் இர்வின் (Eyles Ervoin) இருவரும் இருந்தனர். இவர்கள் நவாபின் வரியை வசூலிக்கவும் அதன் நிர்வாகத்தை நடத்தவும் நியமிக்கப்பட்டனர். இந்தக் கமிட்டிக்கு அரசாங்கத்தாரால் விவரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் நோக்கம் வருமாறு: மேன்மை தங்கிய நவாபு அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தேவையான செலவுக்காக வரிவசூலில் ஆறில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தற்போதைய போர்க்காலத்தில் (ஹைதருடன் போரிட்டது; அப்போர் திப்புசுல்தானால் மேலும் வலுவடைந்தது) கர்நாடகத்தின் வரிவசூல் முழுவதையும்