பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 246

முப்பத்திரண்டு திருநெல்வேலித் தலைமைப் பாளையக்காரர்களைப் பிடித்துக் கொடுத்து, எல்லாப் பாக்கிகளையும் செலுத்தி, போர் தொடங்கியது முதல் கொள்ளையடித்த எல்லாப் பொருட்களையும் திருப்பிக் கொடுத்து, அதற்குத் தகுந்த உறுதிச்சீட்டுகளை வெவ்வேறு மாவட்டங்களில் பெறலாம் என்றும் இல்லாவிட்டால் அந்தந்த இடங்களைத் தாக்க நான் எண்ணமிட்டிருப்பதாகவும் சிவகிரித் தலைவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் செய்தி தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கான எல்லாத் தேவைகளுக்கும் மொத்தமாக 1,20,000 பவுன் கொடுக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுடைய அந்த எண்ணத்தை வரிவசூல் மேற்பார்வையாளருக்குத் (இர்வின்) தெரிவிப்பதாகவும், அவர் அக்கருத்தை ஏற்றுக் கொண்டால் படைகள் பின் வாங்கிவிடும் என்றும், அவர்களை மன்னிக்குமாறு பரிந்துரைக்கப்படும் என்றும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் என்னைச் சந்தித்துக் கலந்து பேச விரும்பினர். ஆனால் என் பாசறையில் வந்து சந்திக்க மறுத்துவிட்டனர். முந்திய படைத்தலைவர்களால் அவர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட பல கலகங்களிலிருந்து அவர்களுக்கு எங்களிடம் அவநம்பிக்கை ஏற்பட்டிருந்ததால், அவநம்பிக்கையாலும் வெறுப்பாலும் அவர்கள் கவலையை அதிகப்படுத்துவதைவிட, நானே யாருடைய துணையுமின்றி அவர்களுடைய சொந்த இடத்தில் அவர்களைச் சந்திப்பதாகவும், ஆனால் எனக்கு ஏதேனும் எதிர்பாராத விபத்து நேரிடின் அது அவர்களை எளிமையாகத் தவிர்க்க முடியாத தண்டனைக்குட்படுத்தும் என்றும் யோசனை தெரிவித்தேன். சிவகிரித் தலைவன் கட்டபொம்ம நாயக்கன், சொக்கப்பட்டியின் பழைய பாளையக்காரர் எல்லோரும் பெரும் பரிவாரங்களுடன் தங்கள் எல்லைகளின் முன் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் தங்கள் விளக்கங்களைக் கூறுவதற்குள் இருட்டிவிட்டது. அந்த நேரத்தில் பின்பக்கத்தில் கவனக்குறைவால் வெடிசத்தம் ஏற்பட்டது. அவ்வெடி என்னைக் குறிபார்த்து சுடப்பட்டதோ என்று ஐயப்பட்ட என் முன்னணிக்காவல் படையை எச்சரிக்கை அடையச் செய்தது. இந்தத் தவறினால் ஏற்பட இருந்த தீங்கான முடிவுகளைத் தவிர்ப்பதற்காக, ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்கள் விருப்பத்தைக் கேட்பதாகக் கூறி நான் பாளையக்காரர்களிடமிருந்து விடைபெற்றுத் திரும்பினேன். மறுநாள் நாங்கள் பகையின்றியே இருந்தோம். ஆனால் அவர்கள் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளாது குழப்பம் செய்யவே, அடுத்த நாள் காலை மறுபடியும் போர் தொடங்கியது. தாக்குதல் பணிகளைப் பகிர்ந்து கொடுத்தோம். குறிப்பிட்ட இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மட்டுமின்றி பொதுவாக நம்பிக்கை அளிக்கும் இத்தகு இந்தியப் போர்முறை வகைகளால் ஏற்படும் வெல்லமுடியாத